முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கேரளாவில் வசிக்கும் தமிழ் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது .இதனை தொடர்ந்து கேரளாவில் சேத்துகுழி, சாஸ்தான் ஓடை, மங்கலம் ,உடும்பன்சோலை ஆகிய பகுதிகளை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று தமிழர்களுக்கு கெடுவும் விடுக்கப்பட்டுள்ளது.இதனால் அங்கிருந்து தமிழர்கள் மலை பாதை வழியாக வந்த வண்ணம் உள்ளனர் .
இதற்க்கு பதிலடியாக, மதுரை தல்லாகுளத்தில் உள்ள கேரள நிதி நிறுவனங்கள் மீது இன்று சட்டக்கலூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதுபோல் புதுச்சேரியிலும் கேரள வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தபட்டது. மேலும் ,மதுரையில் செயல்பட்டு வரும் கேரள நிறுவனங்கள் அடுத்த 24 மணிநேரங்களுக்குள் மூட வேண்டும் இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?