முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கேரள அரசை கண்டித்து தேனி மாவட்ட மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. காய்கறி, பால், அரிசி போன்றவை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கேரள மாநிலத்தவர்களுக்கு சொந்தமான ஓட்டல்கள், நகைக்கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் ஆத்திரம் அடைந்த கேரளக்காரர்கள் கேரளாவில் வசிக்கும் தமிழர்களை தாக்கி வருகிறார்கள்.
சேத்துகுழி, சாஸ்தான் ஓடை, மங்கலம் போன்ற பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை தாக்கி வருகிறார்கள். உடும்பன்சோலையில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு தமிழர்கள் இருக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
24 மணி நேரத்திற்குள் தமிழர்கள் கேரளாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதித்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு வசித்து வரும் தமிழர்கள் கேரள அரசின் தலைமை செயலாளருக்கு புகார் மனு அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து உடும்பன்சோலை, பாரத்தோடு பகுதிகளில் சிறப்பு போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?