காதலருடன் ஒரே அறையில் தங்குவதற்கு அனுமதிக்க மறுத்ததால், நட்சத்திர ஓட்டலில் நடிகை ரிச்சா தகராறு செய்தார்.
'மயக்கம் என்ன,' 'ஒஸ்தி' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர், ரிச்சா கங்கோபாத்யாய். மும்பையை சேர்ந்த இவர்தான் தமிழில் இப்போதைய ஹாட் ஹீரோயின். தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடிக்கிறார்.
பொதுவாக மும்பை நடிகைகள் படப்பிடிப்புக்கே தங்கள் பாய் பிரண்டோடுதான் வருவார்கள். ரிச்சாவுக்கும் அப்படி ஒரு பாய் பிரண்ட் உண்டு. வெறும் பாய் பிரண்ட் மட்டுமல்ல... இவர் ரிச்சாவின் காதலரும்கூட.
அவர் பெயர், சுந்தர். ரிச்சா தமிழ் படப்பிடிப்புக்காக சென்னை வரும்போது, அவரை கவனித்துக் கொள்பவர், காதலர் சுந்தர்தான்.
சமீபத்தில் 'ஒஸ்தி' படத்தின் விளம்பரத்துக்காக ரிச்சா, சென்னை வந்திருந்தார். அவரும், காதலர் சுந்தரும் சென்னை நந்தனத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் சென்று இருவருக்கும் ஒரே அறையை ஒதுக்கும்படி கேட்டார்கள்.
அதற்கு, ஓட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டது. ரிச்சா மட்டும் தங்குவதற்கு அறை தருவதாக ஓட்டல் நிர்வாகி கூறினார். அதற்கு, 'இவர் என் நண்பர். இவருக்கு என் கம்ப்யூட்டரில் கொஞ்சம் வேலை இருக்கிறது. அதற்காகவே என் அறையிலேயே தங்க அனுமதிக்கவும்' என்று ரிச்சா கூறினார்.
என்றாலும் ரிச்சாவுக்கும், அவருடைய காதலருக்கும் ஒரே அறையை ஒதுக்குவதற்கு ஓட்டல் நிர்வாகி பிடிவாதமாக மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த ரிச்சா அவருடன் தகராறு செய்தார்.
ஆனாலும் நிர்வாகம் பிடிவாதமாக இருந்ததால், இருவரும் தியாகராய நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்று ஒரே அறையில் தங்கினார்கள்!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?