கருணா - பிள்ளையான் நடாத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும் ஆயுததாரியுமான இனிய பாரதியின் குட்டுகள் அம்பலமாகியுள்ளது. இவர் மகிந்தரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் ஆவார்.
இனிய பாரதி மீது சுமார் 58 கொலை வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுவதேடு சிறுவர்களை அவர் தனது படைப்பிரிவில் சேர்த்து அவர்களைப் பயன்படுத்தி பல கொள்ளைச் சம்பவங்களையும் செய்துள்ளார். கொலை கொள்ளை மற்றும் சிறுவர்களைப் படையில் சேர்த்தது போன்ற குற்றச் செயல்களைப் புரிந்த இனிய பாரதி மீது கற்பழிப்பு ஆட் கடத்தல் வழக்குகளும் உள்ளது. ஆனால் இலங்கை அரசோ சர்வசாதாரணமாக அவருக்கு "தேசபிமானி" டாக்டர் பட்டம் கொடுத்து அவரை கெளரவித்துள்ளது.
சிறுவர்களை ஆயுததாரியாக இனிய பாரதி பயன்படுத்தியது ஆட்கடத்தலுக்கு பயன்படும் வெள்ளை வாகனம் என அவரது அலுவலகத்துக்கு முன்னர் நின்ற பலரது புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இலக்கத்தகடு மறைக்கப்பட்ட வெள்ளை வாகனமும் இனிய பாரதியின் அலுவலகத்துக்கு முன்னர் நிற்ப்பதும் புகைப்படமாக வெளியாகியுள்ளது. ஆனால் இலங்கை அரசோ இனிய பாரதி செய்த குற்றங்களை வெள்ளைடிப்பதில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறன்றது. இச் செயலை சர்வதேசம் கண்டிக்கவேண்டும். இது நடக்குமா?
அதிர்வு
http://actressmasaala.blogspot.com
http://youtube-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?