சமீபத்தில் தம்மை தமிழ் தேசிய தொலைக்காட்சி என்று கூறிக்கொள்ளும் ஒரு தொலைக்காட்சி மூவரைப் பேட்டி கண்டுள்ளது. இம் மூவரும் முஸ்லீம்கள் ஆவர். ஆனால் அவர்கள் அத்தொலைக்காட்சியில் பேசிய விடையம் முஸ்லீம்கள் படுகொலையாகும். முஸ்லீம்கள் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பாக இவர்கள் பல கருத்துக்களை முன்வைத்தது வரவேற்க்கத்தக்க விடையமாகும். ஆனால் விடுதலைப் புலிகள் அவர்களை யாழில் இருந்து வெளியேற்றினார்கள் பின்னர் நடந்த படுகொலைகள் என்று கடந்த கால கசப்பான அனுபவங்களை இவர்களும் இத் தொலைக்காட்சியும் ஏன் கிண்டிக் கிளறவேண்டும் ? நடந்த கசப்பான அனுபவங்களை மட்டும் நாம் பேசிக்கொண்டே இருந்தால் எம்மிடையே எப்படி ஒரு ஒற்றுமை தோன்றும் ?
பேச எவ்வளவோ ஆரோக்கியமான விடையங்கள் இருக்கும்போது பிரிவினையை மட்டும் தூண்டும் தலைப்புகளை இவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார்கள் மற்றும் அதனை நிகழ்ச்சியில் எவ்வாறு புகுத்துகிறார்கள் என்பதனை இவர்களிடம் தான் டியூஷன் எடுக்கவேண்டுமோ தெரியாது ! இதனைத் தான் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது என்பார்கள் போலும். அது எல்லாம் போக வந்த மூவரில் ஒருவர் தாம் இலங்கை அரசிற்காக பிரித்தானியாவில் வேலைசெய்வதாக சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நபருடன் பேசும்போது வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் தாம் யாருடன் பேசுகிறோம் எனத் தெரியாமல் பல விடையங்களை உளறியும் உள்ளார். பாவம் அவர் என்ன அவை எல்லாம் அதிர்வில் வெளியாகிவிடும் என்று தெரிந்தா சொல்லியிருப்பார் ? ஆனால் அவர் சொன்னதை அதற்காக நாம் வெளியிடாமல் இருக்க முடியுமா என்ன ?
அதாவது இலங்கை அரசாங்கம் கருதுகிறதாம் லண்டனின் புற நகர் பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் சற்று கல்வி அறிவு கூடியவர்கள் என்று (இது முதலாவது பாயின்ட் ஓகே) அதனால் அவர்களது பிள்ளைகள் தமிழ் பாடசாலைகளுக்குச் செல்ல நினைக்கும்போது அத் தமிழ் பாடசாலைகளை இவர்களைக் கொண்டு நடத்த இலங்கை அரசு திட்டம் தீட்டி வருகிறது. தொலைக்காட்சியில் தினோஷ் உடன் தோன்றிய நபர்களில் ஒருவர் தமிழ் பாடசாலைகள் அமைப்பதில் பெரு ஆர்வம் காட்டி வருகிறார். அவர் லண்டனின் புறநகர்ப் பகுதிகளில் ஏற்கனவே சில பாடசாலைகளை ஆரம்பித்தும் உள்ளார். அட பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் இலங்கை அரசின் திட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என நினைக்கிறீர்களா ? "இது புதுசு கண்ணா புதிசு" என்பதுபோல இருக்கு சார் இருக்கு !
ஈழத்தில் உள்ள போராட்டச் சின்னங்கள் அனைத்தையும் மற்றும் விடுதலைப் புலிகளின் கல்லறைகள் தொடக்கம் அனைத்தையும் அழித்துள்ள இலங்கை அரசு அடுத்த தலைமுறைக்கு விடுதலைப் போராட்டம் தெரிந்துவிடக்கூடாது என்பதில் சுமார் 50 வீதம் வெற்றிகண்டு விட்டது என்றுதான் சொல்லவேண்டும். அப்படியே தெரிந்தாலும் பேராடும் எண்ணம் வராமல் இருக்க இளைஞர்களையும் யுவதிகளையும் ஒரு வெளிநாட்டு ஸ்ரைலில் வைத்திருக்கிறது இலங்கை அரசு. அது மக்கள் அறிந்த விடையம். அதற்காக செக்ஸ் படங்கள் மது பாணங்கள் இன்டர் நெட் கஃபேக்கள் என எதை எதைச் செய்ய முடியுமோ அதனைச் செய்துவருகிறது இலங்கை அரசு. ஆனால் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் இன்னும் அதே உணர்ச்சியோடு உள்ளார்கள். அவர்கள் மாறவில்லை. அவர்கள் மாறப்போவதும் இல்லை. ஆனால் அவர்கள் பிள்ளைகளை மாற்றலாம் அல்லவா ? அது தான் அவர்கள் முஸ்தீப்பு ! பாருங்கள் மக்களே 10 ஆண்டுத் திட்டம் 15 ஆண்டுத் திட்டம் போல சிங்களம் எவ்வாறு திட்டம் போட்டு வேலைசெய்கிறது என்று. ஆனால் நாங்கள் சில்லறைக்கு அடிபடுகிறோம் !
புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகள் தமது பெற்றோர்கள் சொல்வதைக் கேட்டு எமது விடுதலைப் போராட்டத்தை உணர்ந்து அதற்கு தமது பங்களிப்பை நல்கிவருகின்றனர். இதுதான் இலங்கை அரசை மேலும் கிலிகொள்ளவைக்கும் விடையமாகும். புலம்பெயர் பெற்றோர்கள் இன்னும் 10 அல்லது 15 வருடத்தில் இறந்துவிட்டால் அவர்கள் பலம் குறைந்துவிடும் என்று கணக்குப் போட்ட இலங்கை அரசு புலம் பெயர் நாடுகளில் இளையோர்களின் செயல்பாடுகளைப் பார்த்து ஆடிப்போயுள்ளனர் என்பது உண்மையாகும். இதனால் அடுத்த சந்ததியினரும் போராடத் தயார் என்ற செய்தி வெளியாகியுள்ளதால் அதனை முளையோடு கிள்ளி எறிய புதுத் திட்டம் ஒன்றை மறைமுகமாகச் செயல்படுத்தவுள்ளது இலங்கை அரசு ! அது தான் இவர்களால் ஆரம்பிக்கப்படும் புது தமிழ் பள்ளிக்கூடங்கள் ! இதனைப் பயன்படுத்தி இலங்கை அரசு அங்கே வரும் தமிழ் சிறுவர்களை வேறு நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு செல்வதோடு அங்கே வரும் பெற்றோரிடமும் பேசி அவர்கள் மனதையும் மாற்றும் எண்ணத்தை நிறைவேற்றப்பர்க்கிறது.
தமிழ் தேசிய தொலைக்காட்சி என்று தம்மைக் கூறிகொள்ளும் இத் தொலைக்காட்சி இதனைக் கூடத் தெரியாமல் இவர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துகிறார்களா ? இல்லை இது தெரிந்து தான் நடக்கிறதா என்பது நிகழ்ச்சித் தயாரிப்பளர்களுக்கும் அறிவிப்பாளர்களுக்கும் தான் "வெளிச்சம்" ! அட அந் நிகழ்ச்சியின் பெயரும் அதுதான் அல்லவா ? அதிர்வுக்கு எழுதப் பேசத் தெரியாது என்று எல்லாம் இவர்கள் தான் சந்தைப்படுத்துகிறார்கள் ! உண்மையச் சொன்னால் சகிப்பதும் இல்லை விமர்சனங்களை முன்வைத்தால் அதனை கருத்தாக ஏற்றுக்கொள்வதும் இல்லை. அப்படி என்றால் நீங்கள் யார் ? நீங்கள் சொல்வதும் மட்டும் தான் உண்மையா ? மக்களே இந்தத் (தொல்)லைக்காட்ச்சியிடம் கேட்க்க மாட்டீர்களா என்ன ?
அதிர்வு
http://actressmasaala.blogspot.com
http://youtube-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?