இராணுவ இரகசியங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதன் மூலம் தாக்குதல்களை நடத்த உதவியதாக இரத்மலானை இராணுவ இடைத்தங்கல் முகாமைச் சேர்ந்த இராணுவ லெப்டினன் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது. 'ஆமி அங்கள்' என அழைக்கப்படும் லெப்டினன்ட் ரஞ்சித் சந்திரசிறி பெரேரா, எல்.ரி.ரி.ஈ. தற்கொலைப் படையைச் சேர்ந்த கந்தவனம் கோகுலநாத் மற்றும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கனரட்ணம் ஆதித்யன் ஆகியோருக்கு தேசத்திற்கு மகுடன் கண்காட்சியின்போது தாக்குதல் நடத்துவதற்கான பாதுகாப்பு இரகசியங்களை வழங்கியதாக சட்டமா அதிபரினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
யுத்தகாலத்தில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் பலாலிக்கு சென்றபோது அவர்களின் வான்கலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பூனகரியில் இருந்து ஷெல் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டபாய சென்ற வானூர்த்தி பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கியவேளை அவ்விடத்தைப் புலிகள் அப்போது துல்லியமாகத் தாகியது யாவரும் அறிந்திருப்பீர்கள். கோட்டபாய பலாலி சென்றதும் அவர் சென்ற விமானம் எப்போது தரையிறங்கும் என்பதுபோன்ற விபரங்களை 'ஆமி அங்கள்' என்று அழைக்கப்படும் இந் நபரே புலிகளுக்குத் தெரிவித்ததாக தற்போது இவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் கோட்டபாயவை பல இடங்களில் குறிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். புலிகள் பலாலி விமான நிலையத்தைத் தாக்கும் வேளை விமானத்தில் இருந்து இறங்கிய கோட்டபாய தலை தெறிக்க ஓடிச் சென்று பதுங்கு குழி ஒன்றினுள் மறைந்திருந்தார் என்பது பலருக்குத் தெரியாது.
அதிர்வு
http://actressmasaala.blogspot.com
http://youtube-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?