கேரளத்தில் தமிழர்களைத் தாக்கினால் எதிர்விளைவுகள் ஏற்படும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கேரள அரசு அணை உடையப்போவதாக திட்டமிட்டு பீதியை ஏற்படுத்தி வருகிறது. தமிழர்கள் அங்கு தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்துதான் விளை பொருட்களும் மின்சாரமும் கேரளாவுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழர்கள் தாக்கப்படுவது தொடர்ந்தால் எதிர்விளைவுகள் ஏற்படும். தமிழகத்தில் வாழும் 40 லட்சம் மலையாளிகள் பாதுகாப்புடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதே சகிப்பு தன்மை தொடரும் என எதிர்பார்க்க முடியாது.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை நிலை நாட்ட வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் நடை பயணம் மேற்கொள்ள உள்ளோம். 17-ந் தேதி பங்களாமேடுவில் தொடங்கும் நடை பயணம் சின்னமனூரில் முடிகிறது. 18-ந்தேதி சின்னமனூரில் தொடங்கும் நடை பயணம் கூடலூரில் முடிகிறது. இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
http://actressmasaala.blogspot.com
http://youtube-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?