வெள்ளைக் கொடி வழக்கில் மூன்று வருடங்கள் தீர்ப்பு வழங்கப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகிறார் என்றால் சிறைச்சாலையில் உள்ள அனைத்து சிறை கைதிகளுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பொது சன உறவுகள் மற்றும் பொது மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று செவ்வாய்யகிழமை காலை (06.12.2011) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
சரத் பொன்சேகா நீதிமன்றத்திலும் வைத்தியசாலையிலும் அரசாங்கத்திற்கெதிராக தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதை அரசாங்கத்தால் தடுக்க முடியாவிடின் அந்தப் பொறுப்பை தன்னிடம் விடுமாறும் தான் அதனை நிறுத்திக் காட்டுவதாகவும் மேர்வின் சில்வா அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளார்.
மேலும், சரத் பொன்சேகவை விடுதலை செய்யக் கோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடிதம் எழுதி எந்த பிரயோசனம் இல்லை எனவும் வௌ்ளைக்காரரால் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய முடியாது. இலங்கை அரசாங்கமே விடுதலை செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
http://actressmasaala.blogspot.com
http://youtube-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?