இலங்கை, மட்டக்களப்பிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள தன்னுடைய அழகான கிராமத்தில் ஒரு சிட்டுக்குருவியைப் போல் சுதந்திரமாக பறந்து திரிந்த 13 வய்து சிறுமி Y.புனிதவதி. அக்குழந்தை போரின் பெயரால் எப்படி சீரழிக்கப்பட்டாள் என்பதை விவரிக்கிறது "உச்சிதனை முகர்ந்தால்".
புனிதவதி எந்த தேவதையாலும் ஆசிர்வதிக்கபடவில்லை. அவள் எல்லா சாத்தான்களாலும் சபிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு நேர்ந்தது உலகில் எந்த குழந்தைக்கும் நேரக் கூடாது. 2009 மார்ச் 1-ம் தேதி புனிதவதி என்கிற அந்த புனித நதியின் வாழ்க்கை திசை திருப்பப்படுகிறது.
அதே ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி வரை அந்தகுழந்தைக்கு நேரும் சோதனைகளை வார்த்தைகளால் எடுத்து சொல்லிவிட முடியாது. எனினும் தனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே மகிழ்ச்சியை சுமந்து வலம் வரும் அந்த குட்டி தேவதையை நேசிக்கிற மனிதர்கள், அவள் வாழ்க்கை பயணம் முழுவதும் அவளை தொடர்ந்து வருகிறார்கள். அந்த மனிதநேயம் தன் இறைவன் இருப்பை உறுதி செய்கிறது. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் - அந்த புனித நதியின் பயணம் தான் உச்சிதனை முகர்ந்தால் என்று உணர்ச்சி பொங்க நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இப்படத்தின் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்.
புனிதவதியாக சிறுமி நீநிகா, சத்யராஜ், நாசர், சீமான், சங்கீதா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
எக்காரணம் கொண்டும் நான் சினிமாவில் பாட்டெழுத மாட்டேன் என்று உறுதியோடு இருந்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இப்படத்தில் பாடல்கள் எழுதி உள்ளார்.
அரசியல் விமர்சகராகவும் சினிமாவின் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தும் தமிழருவி மணியன் இப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.
மைனா படத்தின் மூலம் இசையில் தனக்கான முத்திரையை பதித்த டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
---------------------------------------------------------
படம் - உச்சிதனை முகர்ந்தால்
பாடலாசிரியர் - காசி ஆனந்தன்
இருப்பாய் தமிழா நெருப்பா... நீ!
இழிவாய் கிடக்க செருப்பா... நீ!
ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே
ஒரு தீபம் அணையும் முன்னே துடிக்கிறதே...
துடித்து துடித்து உடல் சிதைகிறதே...
தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே...
எம் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள் - (படத்தில் நீக்கப்பட்ட வரி)
அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்! - (படத்தில் நீக்கப்பட்ட வரி)
எரிமலை தனியுமா... தண்ணீரில்!
கடல் அலை கரையுமா... கண்ணீரில்!
முழங்கிடும் சங்கே முழங்காயோ
விலங்குகள் உடைக்க பிறந்தாயோ
அடிமையாய் வாழும் நிலம் ஒன்று
விடியலைக் காணும் களம் இன்று
வெட்டவெளியோ வீடானது...
பட்டினியோ உணவானது...
போராடு நீ வீரோடு!
மின்னலின் தொடர்ச்சியே... இடியாகும்!
இன்னலின் தொடர்ச்சியே... விடிவாகும்!
கொந்தளித்து அறம் வெடிக்காதோ
கொடியவர் மூச்சை முடிக்காதோ
ஆயிரம் அலைகளை தோளாக்கு
அடிமைக்கு விடுதலை நாடாக்கு (படத்தில் நீக்கப்பட்ட வரி)
மாந்தர் உயிரோ நிலையற்றது...
மானம்தானடா நிகரற்றது...
போராடு நீ வீரோடு!
http://actressmasaala.blogspot.com
http://youtube-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?