ஆப்கானிஸ்தானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் மொகரம் பண்டிகையினை இன்று கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள் இதனையொட்டி தலைநகர் பாக்தாத் அருகேயுள்ள ஹில்லா நகரில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணி முடிவடையும் நேரத்தில் திடீரென சக்தி வாய்ந்த கார் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 45 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் குழந்தைகள் ஆவர். இதே போல் நகரில் மற்றொரு இடத்தில் ரோட்டோரத்தில் குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்தனர்.
மேலும் மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளார்கள். கெர்பாலா நகர் வழிபாட்டு தலத்திற்கு பேரணியாக சென்ற ஷியா பிரிவினரின் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டும்இ வெடிகுண்டுகளை வீசியும் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர். நகரில் பல்வேறு இடங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் மட்டும் மொத்தம் 35 பேர் பலியாகி உள்ளனர்
http://actressmasaala.blogspot.com
http://youtube-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?