Wednesday 30 November 2011

த்ரிஷாவின் அழகு ரகசியம்

 
 
 
சென்னையில் த்ரிஷாவுக்கு பிடித்தமான உணவங்களில் ஒன்று கிரிப்டாஸ் பைவில்லி. த்ரிஷாவுக்கு மட்டுமல்ல, த்ரிஷா மாதிரி இன்னும் ‌எண்ணற்ற திரையுலக பிரபலங்களுக்கு பிடித்தமான ஃபேவரைட் ரெஸ்டாரண்ட் கிரிப்டாஸ் பைவில்லி தான். காரணம் இங்கு வெகு பிரத்யேகமாக கிடைக்கும் கிரீஸ் நாட்டு உணவு வகைகளும், அது உபசரணையாக வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படும் விதமும்தான். கோலிவுட்டில் பல பிரபலங்கள் நட்சத்திரங்களின் உதடுகளை கிரிப்டாஸ் என உச்சரிக்க வைத்திருக்கும் போல...! உயர்ந்த தரத்தில் மிகுந்த சுத்தத்தில் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான கிரீஸ் நாட்டு உணவு வகைகள் அனைத்தும் சென்னையில் கிடைக்கும் ஒரே இடம் கிரப்டாஸ் பைவில்லி தான்!
 
அழகிய மரவேலைபாடுகள் நிறைந்த சுற்றுசுவர்கள் மற்றும் நாற்காலிகள், மெகா சைஸ் கடப்பாகற்களால் ஆன பளபள சாப்பாட்டு மேஜைகள், அந்த பெரிய ஹாலின் ஒரு மூலையிலேயே பளிச்சென செஃப்கள் சமைப்பது வாடிக்கையாளர்களின் கண்களுக்கு தெரியும் படியான அழகிய கண்ணாடி சமயலறை, பின்னணியில் மிதமான இதமான மேலை நாட்டு இசை ஒலிக்க கிரிப்டாஸ் பைவில்லி ரெஸ்டாரண்டில் விதவிதமான வெஜிடபிள் சாலட்கள், ரகம் ரகமான வெஜ்-நான்வெஜ் அயிட்டங்கள் ஒவ்வொன்றையும் சாப்பிடுவதே சொர்க்கம் எனலாம்!
 
கிரிப்டாஸ் என்பது ஹோட்டலின் பெயர் சரி... அதென்ன கிரிப்டாஸ் பை வில்லி என இந்த ஹோட்டலில் கிரேக்க உணவுகளை கிறக்கத்துடன் சாப்பிடும் சாமனியர்களுக்கும் எழும் சந்தேகத்திற்கு இதன் உரிமையாளர் விபின் சச்தேவ் அழகிய தமிழில் அளிக்கும் விளக்கம் இதுதான்... அதாகப்பட்டது, சென்னையில் இயங்கி வரும் ஒரே கிரீஸ் நாட்டு உணவகம் கிரிப்டாஸ் பைவில்லி எதிரே இயங்கி வரும் இந்த ரெஸ்டாரண்டு தான் பசிக்கு ருசியாக உணவு தரும் சமையல் செஃப்பையும் மதிக்கும் உணவகமும் கூட! கிரிப்டாஸின் தலைமை செஃப் வில்லி எனும் நியூசிலாந்துக்காரர் ஆவார். இந்தியாவை அதிலும் குறிப்பாக சென்னையை நேசித்து சென்னையிலேயே செட்டிலாகிவிட்ட அவரை வெறும் சமையல்காரராக, சம்பளத்திற்கான ஆளாக மட்டும் பார்க்காமல் ரெஸ்டாரண்டின் பெயரிலேயே இந்த தலைமை செஃப்பின் பெயரான வில்லியையும் இணைத்து கிரிப்டாஸ் பைவில்லி என இந்த கிரிஸ் ரெஸ்டாரண்டுக்குப்பெயர் சூட்டி விட்டாராம் விபின்!
 
இந்த சந்தோஷத்தில் வில்லியின் கைபக்குவம் மேலும் பிரமாதமாக வெளிப்பட்டு வருவதால், இங்கு அடிக்கடி வந்து போகும் த்ரிஷா போன்ற சினிமா நட்சத்திரங்களின் அழகும், இளமையும் நீண்ட ஆயுளைத்தரக்கூடிய உணவுகளால் மேலும் கூடுகிறதென்றால் அது பொய்யல்ல... என்பதினை எல்லோரும் ஒப்புக்கொள்வீர் தானே!!



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger