Wednesday 30 November 2011

பிள்ளையார் வடிவில் வந்த தேங்காயை குத்திய மனிதர் - மன்னிப்பும் கேட்டார்

 
 
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் தேங்காய் ஒன்றில் பிள்ளையாரின் உருவம் காணப்படுவதாகத் தெரியவருகின்றது. தனது காணியில் வழமையாக தேங்காய் ஆய்வதாகவும்,பின்னர் தனக்கு முன்னால் ஒரு தேங்காய் விழுந்ததாகவும் அது பிள்ளையாரின் உருவத்தில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
பிள்ளையாரின் உருவத்தில் கண்டெடுக்கப்பட்ட தேங்காய்
தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் காணி உரிமையாளர் வெள்ளையப்பா என்பவர் தெரிவித்தார்.

இதேவேளை இவ்வாறான சில மாறுபட்ட உருவங்களில் பிறப்பெடுப்பதென்பது வழமையாகி விட்ட ஒன்று. மனிதர்கள் கூட சில நேரங்களில் மாறுபட்ட வடிவங்களில் பிறப்பதும் தற்கால உலகத்தில் வினோதச் செய்திகளாகி வருகின்றது.


இவ்வாறு இருக்கும் போது ஒரு தேங்காய் பிள்ளையாரின் வடிவில் இருப்பது பெரிதும் ஆச்சரியமானதோ, அல்லது வணக்கத்துக்குரிய பொருளாகவோ கருத முடியாது.

அவ்வாறு வணங்கு பொருளாகக் காட்சிப்படுத்தப்படுமாக இருந்தால் அதில் ஏதோவொரு உள்நோக்கம் இருப்பது உறுதி. அதாவது இதன் மூலம் பணம் சம்பாதிப்பது, அல்லது அருள் வழங்குவதுபோன்று பாசாங்கு சென்று பணம் பறிப்பது போன்றன அரங்கேற்றப்படலாம்.

எனவே உலகம் பல முன்னேற்றங்களைக் கண்டு தற்போது விண்வெளியில் வீடு கட்டும் அளவுக்குப் போய் இருக்கும் நிலையில் ஆதிகால மூட நம்பிக்கையில் சிக்கிச் சிதைந்து சின்னாபின்னமாவதை விடுத்து அன்றாட வாழ்க்கையின் அபிவிருத்தி தொடர்பில் சிந்திப்பதே எதிர்கால வாழ்க்கைக்கு ஆரோக்கியமானதாக அமையும்.

அதைவிடுத்து பிள்ளையார் வடிவில் வந்த தேங்காயைக் கத்தியால் தாக்கியதாகவும், பின் மன்னிப்புக் கேட்டு பத்து வாளி நீரால் அபிசேகம் செய்தாதகவும் தெரிவித்து மூட நம்பிக்கையின் உச்ச நிலையை உலகறியச் செய்யாதீர்கள்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger