சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் போயிருந்தார் கார்த்தி. இவர் நடித்த படங்கள் எல்லாமே அங்கு நன்றாக ஓடி வருகிறது. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இவர் ஒரு சாயலில் அந்த ஊர் ஸ்டார் வெங்கடேஷ் போலவே இருப்பார். அவரை சின்ன வயசில் பார்ப்பது போலவே இருப்பதால்தான் கட்டுக்கு அடங்காமல் திரள்கிறார்கள் இவரது படத்திற்கு.
இந்த உண்மை புரியாத கார்த்தி, ஏதோ ஆந்திரா ரசிகர்கள் அத்தனை பேரும்தான் தன்னை அறிமுகப்படுத்தி இத்தனை பெரிய அந்தஸ்து கொடுத்த மாதிரி பேசியிருக்கிறார். மேற்படி விழாவில் இவரை பேட்டிகண்ட ஒரு பெண் தொகுப்பாளினிக்கு கார்த்தி சொன்ன பதிலை கேளுங்கள்.
சார் உங்களுக்கு தமிழ் ரசிகர்களைப் பிடிக்குமா? தெலுங்கு ரசிகர்களைப் பிடிக்குமா? -இதுதான் கேள்வி.
நிச்சயமா தெலுங்கு ரசிகர்களைத்தான்.. தெலுங்கு ரசிகர்கள் ஒவ்வொரு சீனுக்கும் ஒவ்வொரு பிரேமுக்கும் கை தட்டி விசிலடிச்சு ரசிக்கிறாங்க.. ஆனா தமிழ் ரசிகர்கள் அப்படி இல்லே.. என்கிறார் கார்த்தி.
தக்க பதிலை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?