சிங்கம் இரையை விரட்டினால் மட்டுமல்ல, ரெஸ்ட் எடுத்தால் கூட அதையும் ரசிப்பதற்கு ஆயிரம் பேர் கூடுவார்கள். நிலைமை அப்படியிருக்க, சிங்கம் வாக்கிங் போகிற காலம் இது. ஆமாம்... உடல்நிலை சரியான பின்பு திடீர் திடீரென்று முக்கிய நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்து அந்த ஏரியாவையே இன்பத்தில் அதிர வைக்கிறார் ரஜினி. எஸ்.பி.முத்துராமனுக்கு நடந்த பாராட்டு விழாவில் யாரும் எதிர்பாராமல் கலந்து கொண்டார் ரஜினி. அதன்பின் எடிட்டர் மோகனின் 70 வது பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இதையெல்லாம் கவனித்து வரும் திரையுலகம், இன்னும் அவர் இளையராஜா வீட்டுக்கு போகவில்லையே, ஏன் என்று கவனிக்க ஆரம்பித்திருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மரணமுற்றாரல்லவா? அந்த துக்கத்தில் பங்கேற்க திரையுலகமே திரண்டு வந்தது. இசைஞானியின் பரம வைரியாக கருதப்பட்ட வைரமுத்து கூட நேரில் வந்திருந்து ஆறுதல் சொன்னார். ஆனால் ரஜினி?
துக்கம் நடைபெற்று இத்தனை நாளாகியும் அவர் வரவில்லையாம். (மனைவி, மகள்கள், மருமகன் ஆகியோர் சென்றார்கள். அது தனி) இதற்கு பின்னணியாக ஒரு பழைய பிளாஷ்பேக்கை அவிழ்த்துவிடுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
ஒருமுறை மனைவி லதாவையும் அழைத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு சென்றாராம் ரஜினி. இவரை அழைத்துச் சென்றவர் இசைஞானிதானாம். மறுநாள் காலை ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்த திட்டம். திடீரென்று அன்றிரவு ரஜினியை அழைத்த இளையராஜா, நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு கிளம்புங்க என்று கூறிவிட்டாராம் கண்டிப்பு நிறைந்த குரலில். இதை எதிர்பாரத ரஜினி மனவருத்தத்தோடு திரும்பியதாக ஒரு பிளாஷ்பேக்.
அன்றிலிருந்துதான் ரஜினி, ராஜாவை விட்டு விலகியதாகவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?