Wednesday, 30 November 2011

எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் :நாளிதழ் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்கிய அதிமுக பெண் மேயர்

 
 
 
ஈரோடு மாநகரத்தின் மேயராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த மல்லிகா பரமசிவம். இவர் அதிமுக அமைச்சர் ராமலிங்கத்தின் ஆதரவாளர். துணை மேயராக இருக்கும் கே.சி.பழனிச்சாமி அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்.
 
துணை மேயர் தேர்தலின்போதே மேயருக்கும், துணை மேயருக்கும் மோதல் உருவானது. அடுத்தடுத்து நடந்த கூட்டங்களில் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயரை ஒதுக்கி வைத்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்த மோதல் சம்பவமாக தொடர்ந்து காலைக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டுக்கொண்டே இருந்தது.
 
 
இதனால் ஆத்திரம் அடைந்த மேயர் மல்லிகா பரமசிவம், இன்று மதியம் 1.30 மணி அளவில் ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள காலைக்கதிர் அலுவலகத்தில் புகுந்து, எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் என்று அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் டெலிபோன், பேக்ஸ் மிஷனை கீழே தள்ளியுள்ளார்.
 
 
இந்த சம்பவங்களை புகைப்படம் எடுத்த காலைக்கதிர் புகைப்படக்காரர் சண்முகத்தை அடித்து கீழே தள்ளியுள்ளனர். தடுக்க வந்த செய்தியாளர் கணேசன் என்பவரும் தாக்கப்பட்டார்.
 
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, காலைக்கதிர் நிர்வாகத்தினர் தங்களுடைய அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து செய்தியாளர், புகைப்படக்காரர், அலுவலக உதவியாளர்களை அடித்து பொருட்களை சூறையாடியதாக ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், அவரது உதவியாளர் விஜயா, மகளிர் அணியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளனர்.
 
நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட செய்தி, பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger