நர்ஸ் பன்வாரிதேவி மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக இருவரும், ராஜஸ்தான் முன்னாள் மந்திரி மஹிபால் மடெர்னாவும் செக்ஸில் ஈடுபடும் வீடியோ டேப்புகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் நர்ஸ் பன்வாரிதேவி. அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்த இவர், கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் மாயமாகி விட்டார். எங்கு தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து பன்வாரியின் கணவர் அமர்சந்த் செப்டம்பர் 6-ந்தேதி போலீசில் புகார் செய்தார். மந்திரி மகிபால் மடெர்னா தூண்டுதலின் பேரில் தனது மனைவி கடத்திச் செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டார் என்று தனது புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார். உள்ளூர் போலீசார் `பெண் மாயம்' என்ற வகையில் வழக்கு பதிந்து விசாரணையை தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் மந்திரி மஹிபாலையும் சேர்க்க வேண்டும் என்று கோரி பன்வாரிதேவியின் கணவர் அமர்சந்த் உள்ளூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதை ஏற்று மாடர்னாவையும் இவ்வழக்கில் சேர்க்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் இவரும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அக்டோபர் 16-ந்தேதி மந்திரி பதவியில் இருந்து மஹிபால் மாடெர்னா நீக்கப்பட்டார்.
நர்ஸ் மாயமான விவகாரத்தில் பெரும்புள்ளிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. பல்வேறு கோணங்களில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பன்வாரி பற்றி உருப்படியான எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கேயாவது தலைமறைவாக உள்ளாரா?அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று இன்னும் உறுதியாக தெரிய வில்லை. இதனால் இந்த விஷயத்தில் மர்மம் நீடித்து வருகிறது.
இதனிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ. மல்கான்சிங்கின் சகோதரி இந்திரா விஸ்னாய்வுடன் பன்வாரி உரையாடும் `ஆடியோ டேப்' சமீபத்தில் வெளியானது. அதில், மஹிபால் மாடர்னா தனக்கு ரூ.7 கோடி தரவில்லை எனில் அவருக்கும், தனக்கும் உள்ள உறவை பகிரங்கப்படுத்துவேன் என்று அவரிடம் பன்வாரி மிரட்டும் தொனியில் பேசுவது பதிவாகி இருந்தது.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் மஹிபாலிடம் விசாரணை நடத்தினார். ஆனால் தனக்கு நர்ஸ் பன்வாரியை தெரியாது. அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று மறுத்தார். சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சோகன்லால் விஸ்னாய், பல்தேவ்ஜட், ஷகாபுதீன் ஆகியோரிடம் இருந்தும் எந்த தகவலையும் பெற முடியவில்லை. சம்பவத்தை அடுத்து மாயமாகி விட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. மல்கான்சிங் விஸ்னாய் உள்ளூர் கோர்ட்டால் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நர்ஸ் பன்வாரிதேவியுடன் முன்னாள் மந்திரி மஹிபால் ஒன்றாக இருக்கும் செக்ஸ் வீடியோ டேப்புகள் நேற்று உள்ளூர் சேனல்களில் வெளியாகின. இந்த காட்சிகள் 48 நிமிடங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. ஓட்டல்கள் அல்லது விருந்தினர் மாளிகையில் வைத்து இந்த காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த செக்ஸ் வீடியோ டேப்புகள் பெரும்பரபரப்பை ஏற்படுத்தின. டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட இந்த காட்சிகளை மஹிபாலும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதற்கு மேலும் மறைத்தால் அது தனக்குதான் கேடு என்று உணர்ந்த அவர் நேற்று மாலை ஜோத்பூரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சென்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். "நர்ஸ் பன்வாரியை தனக்கு நன்கு தெரியும். பலமுறை அவரை சந்தித்து இருக்கிறேன்.
ஆனால் பன்வாரி மாயமானதற்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. என் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது'' என்று கூறினார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினார். சுமார் 6 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. பன்வாரிதேவி மாயமானது பற்றிய கேள்விகள் அனைத்துக்கும் தெரியாது, தெரியாது என்றே கூறியுள்ளார். பின்னர் நாளைக்கு (இன்று) மீண்டும் விசாரணைக்கு வந்து ஆஜராக வேண்டும் என்று சொல்லி அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
இன்றும் அவரிடம் விசாரணை நடக்கிறது. செக்ஸ் உறவு வைத்துக் கொண்டு அதை காட்டி ரூ.7 கோடி கேட்டு மிரட்டியதால் நர்ஸ் பன்வாரிதேவி கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும். அவரது உடல் சிதைக்கப்பட்டு புதைக்கவோ எரிக்கவோ அல்லது ஆற்றிலோ வீசப்பட்டு இருக்கலாம் என்று சி.பி.ஐ. கருதுகிறது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் என்றும் சந்தேகப்படுகின்றனர். சி.பி.ஐ.க்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் இந்த வழக்கின் விசாரணையை சூடுபிடிக்க வைத்துள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?