அன்புள்ள துக்ளக் ஆசிரியர் அவர்களுக்கு..
இந்த வார துக்ளக் பார்த்தேன். நூலக இட மாற்றத்தை மறு பரீசலனை செய்ய வேண்டும் என எழுதியிருந்தீர்கள். உங்கள் கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு.
ஆனால் இது சம்பந்தமான கட்டுரைகளில் தகவல் பிழைகள் இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
இந்த வார துக்ளக் பார்த்தேன். நூலக இட மாற்றத்தை மறு பரீசலனை செய்ய வேண்டும் என எழுதியிருந்தீர்கள். உங்கள் கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு.
ஆனால் இது சம்பந்தமான கட்டுரைகளில் தகவல் பிழைகள் இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
- இந்த இடமாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக எழுதி இருக்கிறீர்கள்.
இது தவறு. மக்களுக்கு சம்பந்தம் இல்லாத சில தமிழ் வியாபாரிகள், இலக்கிய வாதிகள் என்ற போர்வையில் இதை எதிர்க்கிறார்களே தவிர, பொது மக்கள் இதை வரவேற்கவே செய்கின்றனர். கன்னிமரா நூலகம் அருகே அண்ணா நூலகமும் மாற்றப்பட்டால், பய்னாளிகளுக்கு வசதிதான் என்பதால் , உண்மையிலேயே நூலகங்களை பயன்படுத்துபவர்கள் இந்த மாற்றத்தை வரவேற்கின்ற்னர். உங்கள் நிருபரை கன்னிமரா நூலகம் அனுப்பி , அங்கு தேர்வுகளுக்காக படித்து கொண்டிருக்கும் இளைஞர்கள் கருத்தை கேட்டு விட்டு அதன் பின் முடிவு செய்யுங்கள். ஏற்பட்டுள்ளது சர்ச்சை அன்று , மகிழ்ச்சிதான்.
- எழுத்தாளர்கள் இந்த மாற்றத்தை எதிர்ப்பதாக எழுதி இருக்கிறீர்கள்
இது முற்றிலும் தவறு. ஒரு சில ஓய்வு பெற்ற , முன்னாள் எழுத்தாளர்கள் கட்சி அடிப்படையில் எதிர்க்கிறார்களே தவிர, தற்போது ஆக்டிவாக எழுதிக்கொண்டு இருக்கும் சாரு நிவேதிதா போன்றோர் இதை எதிர்க்கவில்லை ( அவர் கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன் ) ஒரு செயலுக்கு ரஜினி , கமல் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் , அதை நடிகர்கள் எதிர்ப்பு என செய்தியாக்கலாம். ஓமக்குச்சி நரசிம்மன், என்னத்த கண்ணையா போன்றோர் எதிர்ப்பை ஒட்டு மொத்த நடிகர்க்ளின் எதிர்ப்பாக எடுத்து கொள்ள கூடாது. நூலக மாற்றத்தை எதிர்க்கும் இந்த எழுத்தாளர்கள் எந்த முக்கியத்துவமும் இல்லாதவர்கள். முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாள்ர்களான சாரு போன்றோர் இதை எதிர்க்கவில்லை
- கோட்டூர்புர அண்ணா நூலகத்தை கணிசமானோர் பயன்படுத்துகிறார்கள் என எழுதி இருக்கிறீர்கள்
ஓரளவு உண்மைதான். ஆனால் இதே நூலகம் கன்னிமரா அருகே மாற்றப்பட்டால் , படிப்பவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்
- நலிந்த மக்கள் வாழும் மாவட்டங்களில் இருந்த நிதியை முறைகேடாக எடுத்து பயன்படுத்தியது தவறுதான், அதற்கென்ன செய்வது, இனி மேல் நிதி ஒதுக்கி , அவர்களுக்கு புத்தகம் வாங்கி தரலாம் என எழுதி இருக்கிறீர்கள்.
இது நலிந்த மக்களுக்கு எதிரான கருத்து.
இஸ்லாமியர் வாழும் இடங்கள், தாழ்த்தப்பட்டோர் அதிகம் வாழும் இடங்கள், கல்வி அறிவு குறைந்த மாவட்டங்கள் இனம் காணப்பட்டு , அங்குள்ள நூலகங்களுக்கு உடனடியாக ,கோட்டூர்புரம் நூலகங்களின் புத்தகங்கள் அனுப்பப்பட வேண்டும், இனி மேல் புதிதாக நிதி ஒதுக்கி, புதிதாக அமையவுள்ள அண்ணா நூலகத்திற்கு புத்தகம் வாங்க வேண்டும் என்பதே சரியான தீர்வாக அமைய முடியும்.
http://famousstills.blogspot.com
http://tamil-shortnews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?