முட்டு சந்துல சிக்குன முரட்டு யானை, திரும்பவும் முடியாம திணறவும் இயலாம தடுமாறுன கதையாகிருச்சு நகுலின் நிலைமை. காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கிடுகிடுவென உச்சாணிக் கிளைக்கு போன நகுல், அதன்பின் ஒரு கோடி, ஒன்றரை கோடி என சம்பளத்தை உயர்த்தியதால், தயாரிப்பாளர்கள் யாருமே அவர் பக்கம் போகவில்லை.
திடீர் வெற்றிடத்தில் சிக்கிக் கொண்ட நகுல், எப்படியோ ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் ஒரு படத்தில் கமிட் ஆனார். இந்த படத்தை ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கிக் கொண்டிருந்தார். நகுல் படத்தின் இன்றைய வியாபாரத்தை கணக்கிட்டால், மிக மிக சின்ன பட்ஜெட்டில்தான் படம் எடுக்க முடியும். ஆனாலும் பெரிய மனசு பண்ணிய ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஐந்தரை கோடி வரைக்கும் தாராளம் காட்டினாராம். ஆனால் முதல் பத்து நாட்களிலேயே இந்த பட்ஜெட்டை கிராஸ் பண்ணிவிட்டாராம் அறிவழகன்.
இதற்கு பிறகு இன்னும் ஐந்து கோடியை இந்த படத்தில் முதலீடு செய்தால், அது நகுலுக்கும் அறிவழகனுக்கும்தான் லாபமாக இருக்குமே தவிர, எந்த வகையிலும் இன்டஸ்ட்ரிக்கு பிரயோஜனம் இல்லை என்று முடிவு செய்த ரவிச்சந்திரன், பிறகு பார்க்கலாம் வெயிட் பண்ணுங்க என்று படப்பிடிப்பையே நிறுத்திவிட்டார்.
கடந்த சில நாட்களாக கண்ணீரும் கம்பலையுமாக ஆஸ்கர் பிலிம்ஸ் வாசலில் தவம் கிடக்கிறாராம் நகுல். நிலைமை புரியாமல் ஒரு கோடி, ஒன்றரை கோடி என்று ஆசைப்படும் நடிகர்கள் குறிப்பாக விமல், ஜெய், விதார்த் போன்ற வளரும் ஹீரோக்கள் நகுலை பார்த்தாவது திருந்துவது நல்லது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?