Friday 11 November 2011

முதல்வரிடம் நேர��ியாக மனு - நல்லெ��்ணம் கொண்ட பதிவர்கள் கவனத்திற்க��




 நூலகம் என்பது அறிவு தேடல் கொண்டவர்களுக்கு மட்டும் அன்று. ஒரு சராசரி மனிதனுக்கும் கூட அத்தியாவசியமானது.
ஆனால் ஆட்சியாளர்களுக்கு சராசரி மக்களைப் பற்றி கவலைப்படவே நேரம் இருப்பதில்லை என்கிறபோது நலிந்த மக்களைப்பற்றி கவலைப்பட ஏது நேரம்?

   அண்ணா பல்கலைக்கழகம் , ஐ ஐ டி போன்ற இடங்களில் அறிவு தேடலுக்கு போதுமான வசதிகளை அங்கேயே கொடுத்து விடுகிறார்கள். அதையும் மீறி தேவைப்பட்டால் , நகர் முழுதும் ஏராளமான வசதி வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் விடாப்பிடியாக கோட்டூர்புரத்திலேயே நூலகம் அமைக்க காரணம் மக்கள் நல் வாழ்வு அன்று. தமிழக மக்களில் எத்தனைபேர் இதை பயன்படுத்திக்கொள்ள முடியும் ? .001% இருந்தால் அதிகம். இந்த நிலையில் அங்கு 200 கோடியை கொட்டியது சரியா? 

இதை பல பகுதிகளாக பிரித்து , மாவட்டங்கள் தோறும் நூலகங்களை மேம்படுத்தி இருந்தால் , ஒட்டு மொத்த தமிழகமுமே பயன்படுத்தி இருக்குமே.

எங்கு நோயாளிகள் இருக்கிறார்களோ அங்குதானே மருத்துவர்கள் தேவை. ஏற்கனவே நல்ல நிலையில் இருப்பவர்களிடமே மீண்டும் மீண்டும் மருத்துவர்களை அனுப்பி பயன் உண்டா? 

சென்னை வாழ் மக்களுக்குமே கூட கோட்டூர்புரத்தை விட எழும்பூர்தான் படிப்பதற்கு வசதியான இடம். காரணம் அதை சூழ்ந்துதான் பல நூலகங்கள் உள்ளன. வெளியூரில் இருந்து ரயிலில் வருபவர்களுக்கும் ,புற நகரில் இருந்து வருபவர்களுக்கும் எக்மோர்தான் வசதி. 

தலை நகரில் ஒரு பிரமாண்டமான நூலகம் எழுப்பினால்  விளம்பரம் கிடைக்கும் என்பதை தவிர வேறு எந்த பயனும் இதில் இல்லை.

சென்னையில் வசிக்கும் ஓய்வு பெற்ற எழுத்தாளர்கள் , நல்ல ஓய்வு இடம் பறிபோகிறதே எந்த ஆதங்கத்தில், நூலக மாற்றத்தை எதிர்க்கிறார்களே தவிர, ஞானி போன்றவர்கள் கொள்கை அடிப்படையில் கோட்டூர்புரத்தில் நூலகம் இருப்பதை எதிர்க்கிறார்கள். ஆனால் இதை மாற்றினால் அரசு வேறு இடம் வழங்காது என்பது மட்டுமே அவர்கள் தயக்கம்..

இந்த நிலையில் ஒரு கட்சி தலைவர் ( அதிமுக, திமுக , காங்கிரஸ் அல்ல )  நூலக மாற்றத்தில் இருக்கும் நியாயத்தை முதல்வரிடம் எடுத்து சொல்ல உதவுவதாக ஒப்புக்கொண்டுள்ளார். முதல்வரிடம்  இது குறித்து நேரடியாக மனு கொடுக்கவும் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.

தகுந்த ஆட்கள் மூலம் மனு கொடுத்தால் அது உரிய கவனம் பெறும் என்பது ஒரு புறம் இருக்க , ஏற்கனவே அரசும் நூலக மாற்ற சிந்தனையில் இருப்பதால் மனு கூடுதல் கவனம் பெறும் என்று நம்பலாம்.

 நான் கொடுக்க இருக்கும் மனு கீழ் கண்டவாறு இருக்கும். நீங்களும் நேரடியாக கொடுக்க முடிந்தால் கொடுங்கள். அல்லது தபாலில் அனுப்புங்கள்.  அல்லது ஒருங்கிணைந்து செயல்படுவது என்றாலும் ஓக்கே.

*************************************************************

என் மனு

மாண்பு மிகு முதல்வர் அவர்களுக்கு.

கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள நூலகம் நலிவடைந்த மக்களுக்கு பயனளிக்கவில்லை. 200கோடியை ஒரே இடத்தில் கொட்டியதற்கு பதிலாக, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கீழக்கரை போன்ற ஊர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் ஊர்கள், கல்வியில் பின் தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்கள் என இனம் காணப்பட்டு , ஆங்காங்கு நூலகங்கள் அமைக்கப்பட்டு இருந்தால் அனைவருக்கும் பலனளிப்பதாக இருந்து இருக்கும். கட்டடங்களுக்கு குறைவாகவும், நூல்களுக்கு அதிகமாகவும் செல்வழித்து இருந்தால் , இதே தொகையில் பெரிய அறிவு புரட்சியே ஏற்படுத்தி இருக்க முடியும். ஆனால் சென்ற அரசு ஏதோ சில காரணங்களால் மக்கள் பணத்தை வீணாக்கி விட்டது. 
மக்கள் உங்களிடம் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். டி பி அய்க்கு நூலக்ததை மாற்றுவது நல்லதுதான். ஆனால் அதை விட சிறந்த மாற்று வழி உண்டு.  நூலகங்கள் குறைவாக இருக்கும் இடங்களை இனம் கண்டு அங்கு நூலகத்தை மாற்றுவதே சிறந்தது. அது உடனடியாக முடியாத பட்சத்தில் , இப்போதைய கோட்டூர்புர நூலகத்தை உடனடியாக மூடிவிட்டு, அங்கு இருக்கும் புத்தகங்களை பிரித்து , மாவட்ட நூலகங்களுக்கு அனுப்ப ஆவண செய்தால், தமிழகம் முழுதும் உங்களை வாழ்த்தும்.

தங்கள் உண்மையுள்ள ... 
மக்கள் நலனில் அக்கறை கொண்ட , 
ஒரு சாதாரண மனிதன்
*****************************************8



http://famousstills.blogspot.com


  • http://tamil-shortnews.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger