ஹாய் சாரு..
நலமா..
தமிழ் நாட்டில் தற்போது நடந்து வரும் ஆபாச கூச்சலில் இருந்து நீங்கள் ஒதுங்கி இருப்பது ஒரு விதத்தில் நல்லது என்றாலும், உண்மைகள் ஊமை ஆகும் போது பொய்கள் ஊர்வலம் வருகின்றன என்ற நிலையும் அச்சமூட்டுகிறது.
ஒரு நூலகத்தில் பல புத்தகங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு புத்தகத்தில் பல நூலகங்கள் இருப்பதை ராச லீலாவில்தான் காண இயலும். அந்த புத்தகத்தை எத்தனை தமிழர்கள் படித்து இருப்பார்கள் என்பது கேள்விக்குறியே..
இந்த நிலையில் நூலக இட மாற்ற விவகாரம்தான் பெரிய சீரழிவு போல சிலர் போலியாக கூச்சலிடுவது அருவருப்பாக இருக்கிறது.
இப்படி கூச்சலிடுபவர்களில் பலர் நூலகம் சென்றதும் இல்லை. புத்தகங்கள் படிப்பதும் இல்லை.
வெறுமனே தினத்தந்தியை படித்து விட்டு நூலக மாற்றத்தை எதிர்க்கிறார்கள்.
சுகி சிவம் எல்லாம் எத்தனை புத்தகங்கள் படித்து இருக்கிறார்? எத்தனை நூலகங்கள் சென்று இருக்கிறார். சன் டிவி வாய்ப்புக்காக போலியாக அங்கலாய்க்கிறார்.
ஓர் எழுத்தாளனை கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் , இண்டர்னெட் பிச்சைக்காரன் என வர்ணித்த ஞானி , இப்போது புத்தக காவலராக நடிக்கிறார்.
கோடிகணக்காண ரூபாய்களை ஒரே இடத்தில் முடக்காமல் , இந்த நிதியை பிரித்து செலவிட்டு இருந்தால் , மாவட்டங்கள் தோறும் நூலகங்கள் அமைத்து இருந்தால் , பலரும் பயன்பெற்று இருப்பார்கள்.
ஆனால் சுய விளம்பரத்துக்காக சென்ற அரசு சுய விளம்பரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ஜெயலலிதாவுக்கு போட்டியாக - அவர் வேறு பணிகளுக்காக தேர்ந்தெடுத்து வைத்து இருந்த- கோட்டூர்புரத்தில் நூலகம் அமைத்தது. உண்மையில் பயனாளிகள் மீது அக்கறை இருந்து இருந்தால் , எழும்பூர் போன்ற பகுதிகளில்தான் நூலகம் கட்டி இருக்க வேண்டும்.
எது எப்படி இருந்தாலும், இந்த விவகாரத்தில் கருத்து கூறும் தகுதி உங்களுக்க்கு மட்டுமே உண்டு. ஆனால் சில இலக்கியவாதிகள் - இலக்கியவியாதிகள்- உங்களை தவிர்த்து விட்டு அவர்கள்தாம் தமிழ் நாட்டின் பிரனிதிகள்போல சீன் போடுகிறார்கள்.
இந்த நிலையில் உங்கள் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வாய்ச்சொல் வீரர்களின் கருத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் உங்கள் கருத்துதான் முக்கியமானவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், உங்கள் அதிகாரபூர்வ கருத்தை தமிழகம் எதிர்பார்க்கிறது.
கூலிக்கு மாரடிப்பவர்கள், அறிவு வியாபாரிகள், சவடால் பேர்வழிகள் , அறியாமையில் கிடப்பவர்கள் எல்லாம் சப்தமிடும் இன்றைய நிலையில் , தமிழக்மே இருளில் மூழ்கி கிடப்பது போன்ற அச்சம் ஏற்படுகிறது. உங்களால் மட்டுமே இந்த இருளில் வெளிச்சத்தை கொண்டு வர இயலும்.
http://famousstills.blogspot.com
http://tamil-shortnews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?