இனி நூறு வருஷத்துக்கு அப்புறம்தான் 11/11/11 இந்த மாதிரி தேதி பார்க்க முடியும் அதாவது 11/11/2111 அன்றுதான் அடுத்த 11 வரப்போகுது, குழந்தை பெற காத்திருக்கும் தாய்மார்கள் இன்றே அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள துடிக்கும், அப்ளை செய்த தாய்மார்கள் உலகில் ஏராளம், டாக்டர்களும் 11 பேரை தேர்வு செய்து 11 கத்தியுடன் காத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன....!!!
17)திரு ஜேக்கப் ஜான் (பொருளியல் வல்லுநர்)
18)திரு சர்மா (முன்னாள் இந்திய நிதித்துறை செயலாளர் )
அடுத்து நேற்றும் இன்றும் நண்பன் கூடல்பாலா'வுக்கு போன் செய்திருந்தேன், கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி விசாரிப்பதற்காக, உண்ணாவிரதம் இருந்ததால் பித்தப்பையில் கல் ஏற்ப்பட்டுவிட்டதால் கூடல்பாலா சிகிச்சையில் இருக்கிறார் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.
இனி அணு உலை எதிர்ப்பின் வேகம் எப்படி இருக்கிறதுன்னு அவர் பேச்சின் மூலம் அறிந்து கொண்டதும், நான் சில பத்திரிக்கைகளில் வாசித்தததையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
எண்பது சதவீதம் அணுமின் நிலைய வேலையை நிறுத்திவிட்டார்கள், ரஷ்யன் விஞ்ஞானிகளை அந்நாடு திரும்ப அழைத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது, இந்தியாவின் முதன் முதல் விஞ்ஞானி பரமேஸ்வரன் அவர்களின் விஞ்ஞானி குழு அணுமின் நிலைய எதிப்பு தெரிவித்து கூடங்குளம் வர இருக்கிறார்கள்...!!
தினமலர் பத்திரிக்கை வியாபாரம் நெல்லை குமரி மாவட்டங்களில் கணிசமாக குறைந்து விட்டது...!!!
டாக்டர் உதயகுமார் அவர்கள் தினமலர் பத்திரிக்கையை புறக்கணிக்குமாறு போராட்டக்காரர்களுக்கு வலியுறுத்தி வருகிறார்...!!!
இன்று செட்டிகுளத்தில் உண்ணாவிரதம் நடக்கிறது அணுமின் நிலையத்துக்கு எதிராக...!!!
விஞ்ஞானி பரமேஸ்வரன் தலைமையில் விஞ்ஞானி குழு, மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த வருகிறார்கள் வருபவர்களின் லிஸ்ட் கீழே....
1)திரு புத்தி கோட்டா சுப்பாராவ் (அணு சக்தி பொறியாளர் மற்றும் இந்திய கப்பல் படை முன்னாள் கேப்டன் )
2)திரு பரமேஸ்வரன்(இந்தியாவின் முதல் அணுசக்தி விஞ்ஞானி )
3)திரு சிவாஜி ராவ் (விசாகப்பட்டினம் பல்கலைக் கழக சுற்றுசூழல் மைய இயக்குனர் )
4)திரு பத்மநாபன் (கதிர் வீச்சு ஆபத்து குறித்த ஐரோப்பிய கமிட்டி உறுப்பினர் )
5)திரு அருணாச்சலம் (நெல்லை பல்கலை கழக பரமகல்யாணி சுற்றுசூழல் அறிவியல் ஆய்வு மைய தலைவர் )
6)திருமதி சவும்யா தத்தா (இந்திராகாந்தி சுற்றுசூழல் ஆய்வு மைய முன்னாள் தலைவர்)
7)திரு மெகர் எஞ்சினியர் (அறிவியல் ஆராய்ச்சியாளர் மற்றும் இயற்பியல் வல்லுநர் )
8)திரு சுரேந்திரா கடேகர் (அணு சம்மந்தமான எழுத்தாளர்)
9)திரு அஜ்மல்கான் (அண்ணாமலை பல்கலை கழக கடல்சார் உயிரியல் துறை பேராசிரியர் )
9)திரு அஜ்மல்கான் (அண்ணாமலை பல்கலை கழக கடல்சார் உயிரியல் துறை பேராசிரியர் )
10)திரு லால் மோகன் (இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி)
11)டாக்டர் புகழேந்தி (கல்பாக்கம் சுற்றுசூழல் ஆராய்ச்சி மேற்கொண்டவர்)
12)டாக்டர் ரமேஷ்(கூடங்குளம் புவி அமைப்பு ஆராச்சியாளர்)
13)திரு அனுமந்த ராவ் (தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் உறுப்பினர்)
14)திரு லஜபதி ராய் (மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் )
15)திரு சுக்லாசென் (கொல்கத்தா பிரபல பொறியாளர்)
16)திரு சிவக்குமார்(சென்னை பிரேசிடன்சி கல்லூரி முன்னாள் இயற்பியல் துறை தலைவர் )
16)திரு சிவக்குமார்(சென்னை பிரேசிடன்சி கல்லூரி முன்னாள் இயற்பியல் துறை தலைவர் )
17)திரு ஜேக்கப் ஜான் (பொருளியல் வல்லுநர்)
18)திரு சர்மா (முன்னாள் இந்திய நிதித்துறை செயலாளர் )
மற்றும் மூன்று பேர்...[[நன்றி கூடல்பாலா]]
இவர்களுக்கு முன்பு அப்துல்கலாமின் கருத்து எப்பிடி இருக்கும்னு நீங்களே சீர்தூக்கி பார்த்துக்கொள்ளுங்கள்.
சில காமெடி கூத்துகளும் அணுமின் நிலையத்தில் நடக்கிறதாம், சொன்னால் நம்பமாட்டீர்கள் சிரிப்பீர்கள் ஆனாலும் அதுதான் உண்மை என பாலா சொன்னார், அதாவது அணுமின் நிலையத்தில் பணி செய்யும் CISF பாதுகாப்பாளர்கள் அங்கே இருக்கும் பித்தளை இரும்பு சாமான்களை திருடி வெளியே வித்து வருகிறார்களாம், அதில் இரண்டு பேர் அகப்பட்டும் இருக்கிறார்களாம்...!!!
அவர்கள் மட்டுமில்லை, ஏர்போர்ஸ், நேவி'காரர்கள், மிலிட்டிரி'காரர்களும் இதை செய்கிறார்கள் என சொல்லி வேதனை பட்டார் பாலா...!!!
சரி அடுத்து விஷயத்துக்கு வருவோம்...
அணுமின் ஆதரவாளர்கள் சொல்கிற சில விஷயங்களுக்கு வருவோம்....
விமானத்தில் கோளாறு'ன்னா கடல்ல தரை இறங்கனும்னா கப்பல், ஹெலிகாப்டர் மூலமா ஓரளவு உயிரை காப்பாத்தலாம்,ஓடு பாதையில் தரை இறங்கும் போது தீ பிடிக்காமலிருக்க ஒருவித கெமிக்கலை தூவி தீயை கண்ட்ரோல் பண்ணலாம்...
பஸ்சில் ஆக்சிடென்ட் என்றால், ஆம்புலன்ஸ் 108 இருக்கவே இருக்கு உடனடியா ஆஸ்பத்திரி போயிறலாம்...
சுனாமி வந்தால், மக்களுக்கு தங்கிக்கொள்ள கல்யாண மண்டபம், பள்ளிக்கூடங்கள் இருக்கு.....
இங்கே அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்ப்படும் பட்சத்தில், முப்பது கிலோமீட்டர் சுற்றளவுக்கு மனிதர்களை அப்புறப்படுத்தவேண்டும் அதுவும் இரண்டு மணி நேரங்களுக்குள், மேற்கே நாகர்கோவில்வரை உள்ள மக்கள், வடக்கே வள்ளியூர் வரை உள்ள மக்கள், கிழக்கே திசையன்விளை வரை உள்ள மக்களை ரெண்டு மணி நேரத்துக்குள் முப்பது கிலோமீட்டர் தாண்டி கொண்டு போகவேண்டும்...[[நம்ம ரோட்டின் லட்சணம் தெரியுமில்லையா...???]]
அவர்களுக்கு தங்குமிடம், சாப்பாடு, கல்வி, வேலை வாய்ப்பு இவைகளை "ஒத்திகையாக" செய்து காட்டுங்கள் பார்ப்போம் நாங்கள் எதிர்ப்பை கைவிடுகிறோம்...
ஒரு "ஒத்திகை" பார்க்கவே திராணி இல்லாத நடுவன் அரசு, பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், மன்மோஹன்சிங் மவுனமாக அந்தத்துறை மந்திரியை ராஜினாமா செய்ய சொல்லிட்டு சுவிட்சர்லேண்ட்டுக்கு டூர் போயிருவார் அப்போ மக்கள் கதி....???
நண்பர்களே, நாம் நண்பர்கள், நமக்குள் இதற்கு மாறுபட்ட கருத்துக்கள் நிச்சயம் உண்டு, ஆதலால் இந்த பிரச்சினைக்காக ஒருத்தருக்கொருத்தர் விரோதம் வளர்க்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து, நம் நட்பு நட்பாகவே இருக்கவேண்டும் என்ற எண்ணத்திற்குள் நாம் இருப்போம், ஏனெனில் நாம் நண்பர்கள்.....
அணுமின் நிலையத்தில் வேலை பறிபோன நாப்பது ஐம்பது பேர், கூடல்பாலாவை கொலைவெறியோடு தேடுகிறார்களாம் ஏன்னா அவர்களும் வலைத்தள பதிவர்களாம்....!!!
டிஸ்கி : அப்துல்கலாம் அவர்களை நம்ம சுப்பிரமணியன் சுவாமியை போட்டு தாக்குவது போல சிலர் வாரு வாரு என வாரி புரட்டுகிறார்கள் அதில் எனக்கு உடன்பாடும் கிடையாது மட்டுமல்ல அது கண்டிக்கதக்கதும் கூட, நீங்க கவலைபடாதீங்க அப்துல்கலாம் சார் உங்களுக்கு கவர்னர் பதவி கிடைக்க என் மனப்பூர்வ வாழ்த்துக்கள்...!!!
டிஸ்கி : இன்னைக்கு வரலாறு நிறைந்த தேதியாக இருப்பதாலும், வரலாறு முக்கியம் என்பதாலும், எனது அணுமின் நிலைய எதிர்ப்பை பதிந்து வைக்கிறேன்.
http://dinasarinews.blogspot.com
http://tamil-video.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?