என்னை விட அழகாக இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. எனவே அவருடன் என்னை ஒப்பிடக் கூடாது என்று கூறியுள்ளார் குஷ்பு.
மும்பையிலிருந்து வந்த மொழு மொழு ஹீரோயின் ஹன்சிகா. இவரைப் பார்ப்பவர்கள் எல்லாம், அப்படியே அச்சு அசல் குஷ்பு போலவே இருக்கீங்க என்று கூறி ஹன்சிகாவை நெளிய வைக்கிறார்களாம்.
என்னைப் போய் குஷ்பு மேடத்துடன் இணைத்துப் பேசுகிறார்கள். இது எனக்குப் பெருமையாக உள்ளது. அதேசமயம், நான் எங்கே அவர் எங்கே என்று அடக்கத்துடன் கூறி வருகிறார் ஹன்சிகா.
இதற்கிடையே, தன்னுடன் ஹன்சிகாவை ஒப்பிட்டுப் பேசுவது குறித்து குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் மூலம் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், உண்மையைச் சொல்வதாக இருந்தால், என்னை விட அழகாக இருக்கிறார் ஹன்சிகா. நான் நடிக்க வந்தபோது எப்படி இருந்தேனோ அதை விட அழகாக இருக்கிறார். அருமையாக நடிக்கிறார். எனவே என்னை அவருடன் ஒப்பிட முடியாது என்று கூறியுள்ளார் குஷ்பு.
குஷ்பு சொன்னா சரியாகத்தான் இருக்கும்.!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?