அட… உனக்கும் தெரியுமா என்று ஆச்சர்யப்படுவது ஒரு ரகம். இவனுக்கு கூட
தெரிஞ்சுருக்கே என்று வேதனைப்படுவது வேறொரு ரகம். இதில் அஜீத் முதல் ரக மனிதர். தனக்கு தெரிந்த மாதிரியே ஹெலிகாப்டர் ஸ்பேர் பார்ட்ஸ் பற்றியும், விமானம் ஓட்டுவது பற்றியும் அதிகம் அறிந்து வைத்திருக்கும் ஒரு இளைஞரை, 'தம்பி வாப்பா' என்று பேச்சு துணைக்காக அழைத்துக் கொண்டாராம் அஜீத்.
இடம்- ஏகன் படப்பிடிப்பு. அட இவ்வளவு நாள் கழித்து இப்படி ஒரு நியூசா என்று எரிச்சல் படுகிறவர்கள் தொடர்ந்து வாசிக்கவும். இப்படத்தின் இயக்குனர் ராஜு சுந்தரத்தின் நண்பரான ஜித்தேஷ் அவரது ஆசைப்படி இந்த படத்தில் பணியாற்ற போயிருந்தாராம். அடிப்படையில் பைலட் படிப்பை முடித்திருக்கிறார் இவர். படப்பிடிப்பில் தம்பி என்ன படிச்சுருக்கே? என்ற அஜீத் விசாரித்தபோது உண்மையை சொன்னாராம். அவ்வளவுதான். அன்றிலிருந்தே ஜித்தேஷின் நண்பராகிவிட்டார் அஜீத்.
நாளும் பொழுதுமாக ஹெலிகாப்டர், விமானம் என்று பிரித்து மேய்ந்திருக்கிறார்கள் இருவரும். அஜீத்தை பார்த்து அப்படியே மெல்ல மெல்ல நடிக்கிற ஆசையையும் வளர்த்துக் கொண்ட ஜித்தேஷ், இன்று ஒன்றல்ல, இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். எல்லாம் அஜீத் போட்ட ஆர்வ சுழி!
தலக்கோணம் என்ற படத்தில் இவருக்கு ஜோடி ரியா. மார்கழி திங்கள் என்ற படத்தில் இவருக்கு ஜோடி திஷா பாண்டே. இவ்விரு படங்களும் வேக வேகமாக வளர்ந்து வருகிறதாம். கோடம்பாக்கத்துக்கு பஸ் ஏற துடிக்கும் ஏராளமான இளைஞர்கள் காத்திருக்கிற பஸ் ஸ்டாப் கூத்துப்பட்டறைதான். இவரும் இதே பள்ளியில் பயிற்சியை முடித்துவிட்டு நடிக்க வந்திருக்கிறார்.
தல-தான் ரோல் மாடல் என்கிறார் ஜித்தேஷ். அந்த இடத்தை பிடிக்கணும்னா முழு உடம்பும் போராடிக் கொண்டே இருக்கணும் பிரதர்!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?