'நான் நைகருக்கு தப்பிச்செல்லவில்லை' : சிரிய தொலைக்காட்சிக்கு கடாபியின் புதிய செவ்வி ஒன்றைக் கொடுத்து அதிரடி வைத்தியம் கொடுத்துள்ளார். லிபியாவின் முன்னாள் அதிபர் மௌமர் கடாபி, நைகருக்கு தப்பிச்சென்றுவிட்டதாக கூறும் தகவல்களை அவர் முற்றாக மறுத்துள்ளார்.
மக்களிடம் பொய்யான தகவல்களை பரப்பி உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்தபப்டுவதாக அவர் எச்சரித்துள்ளார். லிபியாவிலிருந்து சிரியாவின் தொலைக்காட்சிக்கு, தொலைபேசி மூலம் பேசிய கடாபி இத்தகவலை வெளியிட்டுள்ளதுடன், தனது படைகள், இடைக்கால அரசை வெற்றிகொள்ளும் எனவும் அறிவித்துள்ளார்.
கடாபி அகதி தஞ்சம் கேட்டு தமது நாட்டுக்கு வந்தால் எவ்வாறு அதை அணுகுவது என்பது குறித்து பரிசீலித்து வருவதாக முன்னர் நைகர் நாடு தெரிவித்திருந்தது. அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இது தொடர்பில் பிபிசிக்கு தெரிவிக்கையில், கடாபி தமது நாட்டுக்கு வந்தால் அவரை ஏற்றுக்கொள்வது குறித்தோ அல்லது சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பது குறித்தோ, பின்னர் தீர்மானிக்கபப்டும் என தெரிவித்தார்.
இதேவேளை கடாபியியை நைகருக்குள் அனுமதித்து ஏற்றுக்கொள்ள கூடாது என கிளர்ச்சிப்படை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
http://tamil-actress-photo.blogspot.com
http://tamil-actress-photo.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?