Friday 9 September 2011

மதுவிலக்கு பற்ற�� வாய்கிழிய பேசுபவர்கள்தான் கள்ள��்சாராயம் காய்ச்���ுகிறார்கள்: ஜெய��லிதா



சட்டசபையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு அத்துறையின் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் பதில் அளித்துப் பேசினார்.

அப்போது அவர், ''தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது 99 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. மலைப்பகுதிகள் மற்றும் அடர்ந்த காடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படலாம். அதையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களில் இருந்து சாராயம் கடத்திக் கொண்டுவருவதையும் கட்டுப்படுத்தி விட்டோம்.

கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும் அதன் விற்பனையையும் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதால் டாஸ்மாக் கடைகளின் விற்பனை 9.81 சதவீதமாக உயர்ந்துள்ளது. டாஸ்மாக் விற்பனையை அரசு ஊக்கப்படுத்தவில்லை.

தனியாருக்கு போய்க்கொண்டிருந்த பணம் அரசு கஜானாவுக்கு திருப்பிவிடப்பட்டு இருக்கிறது. கள்ளச்சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தி வருகிறோம்.

அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் 3,605 பெண்கள் உள்பட 28,635 பேர் மீது கள்ளச்சாராய வழக்குகள் போடப்பட்டு இருக்கின்றன. 24,630 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கோர்ட்டு மூலம் ரூ.76 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் அந்த ஆசை இல்லாமல் இல்லை. மதுவின் கொடுமைகளை அவர் நன்கு அறிவார்.

மது விற்பனை மூலம் ரூ.15 ஆயிரம் கோடி அரசுக்கு வருமானமாக கிடைக்கிறது. அண்டை மாநிலங்களில் எங்கேயும் மதுவிலக்கு இல்லை. அப்படி இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு கொண்டுவந்தால் இந்த வருமானம் சமூக விரோதிகளின் கைக்கு சென்றுவிடும். எனவே, அந்த வருமானத்தை அரசு கஜானாவுக்கு திருப்பி விட்டிருக்கிறோம்.

மதுவிலக்கை மாநில அரசு அவ்வளவு எளிதில் கொண்டுவந்துவிட முடியாது. மத்திய அரசு நினைத்தால் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பை மாநிலங்களுக்கு கொடுத்துவிட்டு ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் மதுவிலக்கை அமல்படுத்தலாம்'' என்று கூறினார்.

அப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசும்போது, ``மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்றும், மதுவிற்பனையை தடை செய்ய வேண்டும் என்றும் வாய்கிழிய பேசுபவர்கள்தான் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள்'' என்றார்.

தொடர்ந்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசும்போது,

''குடிப்பழகத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். மதுவின் தீமைகளை மாணவர்களுக்கு விளக்கிக் கூறும் வகையில் அவர்களுக்கு கட்டுரைப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகளை நடத்துகிறோம். இதன்மூலமாக மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு மதுவின் தீமைகளை விளக்கிக் கூறுவார்கள்.

தற்போது மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நடத்தப்படும் போதை மீட்பு முகாம்கள் விரிவுபடுத்தப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் ஆகியவற்றில் தண்டனை பெற்று திருந்தி வாழ விரும்புபவர்கள் தொழில்தொடங்க கடன் வழங்கப்படுகிறது. அவர்களை நல்வழிப்படுத்த பெருமுயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

மதுவிற்பனை தனியார் வசம் இருந்தபோது அரசுக்கு ஆயத்தீர்வை மூலமாக ரூ.1,657 கோடியும், விற்பனை வரி மூலமாக ரூ.1,932 கோடியும் கிடைத்தன. ஆனால் மதுவிற்பனையை டாஸ்மாக் மூலமாக ஏற்று நடத்திய பிறகு அரசுக்கு வருவாய் பெருமளவு அதிகரித்தது. 2010-2011 நிதி ஆண்டில் மதுபான விற்பனை மூலமாக ரூ.8,115 கோடி ஆயத்தீர்வையும், ரூ.6,849 விற்பனை வரியும் ஆக மொத்தம் ரூ.14,965 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்தது.

மதுபான விற்பனையை அரசு ஏற்று நடத்திய பிறகு அரசுக்கு ரூ.11,325 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்து இருக்கிறது. இவ்வாறு தனியாருக்கு போக வேண்டிய பணத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது சாதூர்யத்தால், மதிநுட்பத்தால் அரசு கஜானாவுக்கு திருப்பிவிட்டுள்ளார்'' என்று கூறினார்.

http://tamil-actress-photo.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger