இலங்கை கம்மியூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர இந்திய விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இவர் தனது விஜயத்தின்போது இந்தியாவில் உள்ள கம்மியூனிஸ்ட் தலைவர்களான டி.ராஜா அவர்களைச் சந்தித்து நீண்டநேரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
சமீபகாலமாக தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு பெருகிவரும் நிலையில் இந்திய கம்மியூனிஸ்டுகளும் தமது ஆதரவை அதிகரித்துள்ளனர். ஏற்கனவே ஜெயலலிதாவை இலங்கை அழைத்து தனது வலைக்குள் சிக்கவைக்க இலங்கை எண்ணியது தோல்வியில் முடிந்தது யாவரும் அறிந்ததே. இதனை ஈடு செய்ய தற்போது இந்திய கம்மியூனிஸ்டுகளை இலங்கை குறிவைத்துள்ளதா என்ற சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளது.
தற்போது உள்ள சூழ் நிலையில் இந்திய கம்மியூனிஸ்டுகள் இச் சந்திப்புத் தொடர்பாக விழிப்பாக இருக்கவேண்டும் என தமிழ் புத்திஜீவிகளும் ஆய்வாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இலங்கை இதுவரைகாலமும் மேற்கொள்ளாத பல ராஜதந்திர நடவடிக்கைகளை முடிக்கிவிட்டுள்ளது என்றும் அதற்காக பல அரசியல்வாதிகளையும் புத்திஜீவிகளையும் அது பயன்படுத்திவருவதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக தமிழ் நாட்டில் மாறிவரும் கள நிலை இலங்கைக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளதாக அறியப்படுகிறது.
அதிர்வு
http://tamil-actress-photo.blogspot.com
http://tamil-actress-photo.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?