தமிழக சட்டசபையில் (07.09.2011) நீதி நிர்வாகம், சிறைச் சாலைகள் துறை மானிய கோரிக்கைக்கு பதிலளித்து அமைச்சர் செந்தமிழன் பேசினார். தனது உரையை நிறைவு செய்யும்போது ஒரு கதையை கூறினார்.
''நமது கையில் உள்ள 5 விரல்களுக்குள் யார் பெரியவர் என்ற மோதல் வந்தது. அப்போது மற்ற 4 விரல்களும், தங்களை பறி உயர்வாக கூறி கொண்டன. கடைசியாக சுண்டு விரல் தன்னைப்பற்றி கூறியது.
'தெய்வத்தை கைகூப்பி வணங்கும்போது நான் தான் முன்னால் இருக்கிறேன். எனவே நான் தான் பெரியவன்' என்றது. இதைபோல சுண்டுவிரல் போல சிறியவனாக எனக்கு பெரிய பொறுப்புகளை வழங்கியுள்ள முதல்வர் அம்மாவுக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்'' என்றார். முதல் அமைச்சர் ஜெயலலிதாவும் இதனை ரசித்தார்.
http://tamil-actress-photo.blogspot.com
http://tamil-actress-photo.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?