அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நீண்டகாலத் தண்டனைப்பெற்ற சிறைவாசிகளுக்குத் தண்டனைக் குறைப்பும், விடுதலையும் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவு மாநில அரசுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளது.
கடந்த தி.மு.க. ஆட்சியின் போது அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 7 ஆண்டுகள் சிறை தண்டனை கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் 1450 பேர் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். அதிலும் மதுரை மாநகராட்சி உறுப்பினராக இருந்த லீலாவதி அம்மையார் பட்டப்பகலில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கு தண்டனை சிறைவாசிகளும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் ஆயுள் தண்டனைப் பெற்ற முஸ்லீம் சிறைவாசிகளும், இராசீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்றவர்களும் விடுவிக்கப்படவில்லை.
கடந்த தி.மு.க. ஆட்சி செய்த தவறு, அ.தி.மு.க. ஆட்சியில் திருத்தப்படும் என நம்புகிறேன். எத்தகையப் பாகுபாடும் இல்லாமல் நீண்ட காலத் தண்டனைப் பெற்ற கைதிகள் யாராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலையை வழங்குமாறு மனித நேய அடிப்படையிலும், இந்திய அரசியல் சட்டம் அளித்திருக்கிற உரிமையின் அடிப்படையிலும் வேண்டிக்கொள்கிறேன்.
இப்படிக்கு
பழ.நெடுமாறன்
http://tamil-actress-photo.blogspot.com
http://tamil-actress-photo.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?