முக்கிய அறிவிப்பு;நண்பர்களே..இப்பதிவில் குறிப்பிருப்பவை சில பெண்கள் பற்றியது மட்டுமே என சொல்லியிருக்கிறேன்.இதற்காக சென்னையில் இருக்கும் பெண்கள் எல்லாமே அப்படித்தான் என அர்த்தம் கொள்ளாதீர்கள்...இப்படியும் சிலர் என்பதற்காக எழுதப்பட்ட பதிவு இது.
முன்னெல்லாம் ஒரு பெண்ணை பார்க்கணும்னா கோயிலுக்கோ,பீச்சுக்கோ,கல்லூரி வாசலுக்கோ போவோமுங்கோ..இப்பல்லாம் ஒரு பொண்ணை பார்க்கணும்னா நீங்க நைட் க்ளப்தான் வரணுமுங்க..என சிம்பு ஒரு படத்தில் பாடுவார்.இது அவரின் ஆசை...ஏன்னா தினசரி அவர் பிழைப்பே ஒவ்வொரு நைட்க்ளப்பா சுத்துவதுதான்...பார்த்த மூஞ்சியே பார்த்தா சலிப்பா இருக்காதா..?அதான் பாட்டு மூலம பெண்கள் கூட்டம் சேர்த்தார்...சிம்பு மட்டும்தான் அப்படியா என வரிசையாக நடிகர் பெயர் போட்டு இவர்கள் யோக்கியமா என சிலர் கமெண்ட் போடுகின்றனர்..யோவ் உதாரணத்துக்கு ஒருத்தரை சொல்லக்கூடாதா..?..
இதெல்லாம் பொதுவில் பேசுவதே தவறு என சிலர் கமெண்ட் போடுகின்றனர்...அப்படியே வாயை மூடிக்கிணு இருந்தா பொன்ணை பெத்தவன் உசாராக வேணாமா..இதனால் நல்ல குடும்ப பெண்களும் பாதிக்கப்படுவாங்களே அதுக்குதான் இந்த உஷார் பதிவு..!
நானும் சென்னையில்தான் இருக்கிறேன்..எனக்கு ஒண்ணும் தெரியலையே என ஒருவர் கமெண்ட் போடுகிறார்.சார்..ஆஃபீஸ்,விட்டா வீடு..பணம்,முதலீடு பத்தி சிந்தனை இருக்குறவங்களுக்கு இதெல்லாம் தெரியவர வாய்ப்பே இல்லை.லோக்கல் ஆளுங்களுக்கு எல்லாமெ தெரியும்.கொஞ்சம் வசதி இருந்தாலும் அவங்க சிந்தனையெல்லாம் பெரிய லெவல்லதான் இருக்கும்..இதை பத்தியெல்லாம் கணிக்க முடியாது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?