நடிகர் பிரபு தேவாவை திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து, இந்து மதத்துக்கு மாறியுள்ளார் நடிகை நயன்தாரா. சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு, தனக்கு ஆறுதலாக இருந்த பிரபுதேவாவை காதலித்து வருகிறார் நடிகை நயன்தாரா. இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் முதல் காதல் மனைவி ரமலத் இடைஞ்சலாக இருந்ததால் அவரை பிரபுதேவா விவாகரத்து செய்து விட்டார். ரமலத்தும், முதலில் விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை; பின்னர் லம்ப்பாக பெரும்தொகை மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை பிரபுதேவாவிடம் இருந்து பெற்றுக் கொண்டு விவாகரத்துக்கு சம்மதித்தார். இவர்களது விவாகரத்தை சமீபத்தில்தான் குடும்ப நல கோர்ட் முறைப்படி அறிவித்தது.
இதையடுத்து நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளும் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் பிரபுதேவா. இந்த காதல் ஜோடியின் திருமணத்திற்கு மதம் பெரும் தடையாக இருந்தது. பிரபுதேவா இந்து மதத்தை சேர்ந்தவர். நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். எனவே இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் மதத்திற்கு மற்றவரை மாறிவிடும்படி கேட்டுக் கொண்டதாகவும், அதனால் திருமணத்தில் சிக்கல் எழுந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. முன்பு ரமலத் என்ற இஸ்லாமிய பெண்ணை இந்துவாக மாற்றிய பிரபுதேவா, நயன்தாராவின் மனதை மாற்ற மாட்டாரா என்ன?
தனக்காக தன் காதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபுதேவாவுக்காக, நயன்தாரா மதம் மாறிவிட்டார். முறைப்படி இந்து மதத்திற்கு மாறிய நயன்தாரா, கொச்சியில் இருந்து சென்னை வந்து ஆரிய சமாஜத்தில் வேத விற்பன்னர்கள் முன்னிலையில் சுத்த பரிகாரம் செய்துள்ளார். பி்ன்னர் வேத மந்திரங்களை உச்சரித்தபடி இந்துவாக மாறினார். இந்து மதத்துக்கு மாறுவதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் உணருவதாக கூறிய நயன்தாரா, மத மாற்றத்துக்கு யார் வற்புறுத்தலும் காரணமல்ல; இது எனது தனிப்பட்ட விருப்பம், உரிமை என்றும் கூறியுள்ளார்.
நயன்தாராவின் நிஜப்பெயர் டயானா மரியம் குரியன். இந்துவாக மாறியதைத் தொடர்ந்து, சினிமாவுக்காக வைக்கப்பட்ட நயன்தாரா என்ற பெயரையே இனி தன் பெயராக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருக்கிறாம்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?