ஜீவா நடித்த 'கோ' படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் 'ரெளத்திரம்'. ஸ்ரெயா, பிரகாஷ் ராஜ், கணேஷ் ஆச்சார்யா, ஜெய்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள்.
புதுமுகம் பிரகாஷ் நிக்கி இசையமைக்க, கோகுல் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது அப்பா ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் நடித்து இருக்கிறார் ஜீவா.
பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி வரிகளான 'ரெளத்திரம் பழகு' என்பதற்கு ஏற்ப இக்கதையை தயார் செய்து இருக்கிறாராம் இயக்குனர் கோகுல். புரட்சியளார்கள் கோபத்தை வெளிக்காட்டுவது தீமையை அழிக்க மட்டும் அல்ல, நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவும் தான் என்பதை இப்படத்தின் கதையில் கூறி இருக்கிறாராம்.
இப்படத்தின் டிரெய்லரை பார்க்கும் போதே இப்படம் ஒரு ஆக்ஷ்ன் படம் என்பது தெளிவாகிறது. ஸ்ரெயா இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக, படம் முழுவதும் அவருக்கு உதவி செய்யும் ஒரு சட்டக் கல்லூரி மாணவியாக நடித்து இருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு டிரெய்லரும், மூன்று பாடல்களும் திரையிட்டார்கள். அப்போது திரையிடப்பட்ட 'மாலை மங்கும் நேரம்' என்ற பாடல் இப்போது தமிழக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
ராம் கோபால் வர்மா தனது படத்தில் நடிக்க கேட்ட போது மாட்டேன் என்று மறுத்தவர் பிரபல நடன இயக்குனரான கணேஷ் ஆச்சார்யா. ஆனால், 'ரெளத்திரம்' படத்தின் கதையை கேட்டு இப்படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.
இப்படம் குறித்து நடிகர் ஜீவா " இப்படத்தின் கதை வித்தியாசமான கதை என்று கூற மாட்டேன். ஆனால் நிச்சயமாக சுவாரஸ்யமானது. இந்த படம் எனது அப்பா தயாரிப்பில் வெளிவருவதால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கண்டிப்பாக இப்படம் வெற்றி பெறும் " என்று கூறியுள்ளார்.
இப்படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளிவர இருக்கிறது
ரெளத்திரம் டிரெய்லர்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?