நடிகர், நடிகைகளுக்கு சதவீத அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்க வலியுறுத்தி, தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில், தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.
இத்தீர்மானம் அமலானால், நடிகர், நடிகையர் சம்பளம் குறையும். இது குறித்து, தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலர் பன்னீர்செல்வம், இணைச் செயலர் ஸ்ரீதர் ஆகியோர் கூறியதாவது: தமிழகத்தில் 1990ம் ஆண்டில், 2,800 தியேட்டர்கள் இருந்தன. இப்போது, 1,260 தியேட்டர்களே உள்ளன. படத் தயாரிப்பு செலவு கூடிக்கொண்டே வருகிறது. தயாரிப்பு செலவைக் குறைப்பது பற்றியும், டிக்கெட் கட்டணத்தை சீரமைப்பது குறித்தும், தியேட்டர் உரிமம் புதுப்பிக்கும் கால அளவு குறித்தும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம்.
படத்திற்கு படம் முன்னணி நடிகர்களின் சம்பளம் கூடிக்கொண்டிருக்கிறது. சில நடிகர்கள் 20 கோடியிலிருந்து 25 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகின்றனர். இந்நிலையால், தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். தியேட்டர்களில் படம் ஓடாவிட்டால், படத்தை நேரடியாக வெளியிடும் தியேட்டர்காரர்களும், வினியோகஸ்தர்களும் பலத்த நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால், வசூலாகும் தொகையில் சதவீத அடிப்படையில் நடிகர், நடிகைகளுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தி, பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவர உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?