கடந்த சில நாட்களாக வெளியான சினிமா விளம்பரம் ஒன்றில் நடிகை ரீமாசென் தனது முழு முதுகும் தெரியும்படி படுத்திருப்பார். இது ரீமா நடித்த பெங்காலி படத்தின் டப்பிங் படத்தில் இடம்பெறும் காட்சி. அதேநேரம் இந்த படம் அந்த மாதிரி படமல்ல, அற்புதமான ஆர்ட் பிலிம் என்கிறார்கள்.
இதற்கிடையில் ரீமாசென்னின் க்ளாமர் படத்தை போட்டு விளம்பரம் செய்யும் தகவல் ரீமாவின் காதுகளுக்கு எட்டியிருக்கிறது.
இதனால் தனக்கு நெருக்கமானவர்களிடம், அய்யோ என் மானம் போச்சே என்று புலம்பித்தள்ளுகிறாராம். சம்பந்தப்பட்ட டப்பிங் பட தயாரிப்பாளருக்கே போன் அடித்துவிட்டார்.
விளம்பரத்தை உடனே நிறுத்தலைன்னா உங்க மேல ஒரு கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று எச்சரித்துள்ளார்.
இதனால் அதிர்ந்து போயிருக்கிறார் தயாரிப்பாளர். அவசரம் அவசரமாக அடிக்கப்பட்ட போஸ்டர்களை யெல்லாம் திரும்ப பெற்றிருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?