சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி மற்றும் அரசியல் சிறை வாசிகள் விடுதலைக்கான குழு இணைந்து வேலூரில் முருகன்,சாந்தன், பேரறிவாளனை காப்பாற்றக்கோரி பொதுக்கூட்டம் நடத்தினர்.
இக்கூட்டத்தில் பெரியார் திராவிட கழக கொளத்தூர் மணி பங்கேற்று பேசினார்.
அவர், ''110 விதியின் கீழ் இவர்களை காப்பாற்ற எனக்கு அதிகாரம் இல்லை என பேசிய முதல்வரின் மனதை நம் தமிழர்களின் போராட்டங்களும், தோழர் செங்கொடியின் தீக்குளிப்பால் எழுந்த எழுச்சியும் மாற்றியதால், இன்று சட்டமன்றத்தில் மூவரை தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்கக்கோரி தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டுவந்துள்ளார்கள்.
இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மக்கள் போராட்டங்கள் என்பது வீண்போகாது என்பதே இது காட்டுகிறது. உச்சநீதிமன்றமே ராஜீவ்காந்தியை தவிர வேறுயாரையும் கொல்லும் எண்ணம் இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆக, அது பழிக்குப்பழி நடந்த கொலையே தவிர வேறு இல்லை.
தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்... பூந்தமல்லி சிறப்புமுகாமில் விசாரணையே இல்லாமல் விசாரணை முடிந்து தண்டனைகள் முடிந்து பல அகதிகள் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ளனர்.
அவர்கள் உங்களது ஆட்சிக்காலத்தில்தான் விடுவிக்கப்படுவார்கள் என நம்புகிறோம். ஏனெனில் இதற்கு முந்தைய பலரை விடுதலை செய்துள்ளீர்கள். இப்போதும் விடுதலை செய்யுங்கள் என கேட்டுக்கொள்கிறோம்'' என்று பேசினார்.
http://cmk-mobilesms.blogspot.com
http://cmk-mobilesms.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?