முருகன், சாந்தன், பேரறிவாளனை சந்திக்க டெல்லி பல்கலைக்கழக பேராசிரியரும், அரசியல் சிறைக்கைதிகள் விடுதலைக்கான அமைப்பின் செயல்தலைவருமான எஸ்.கே.ஆர்.கிலானி, இன்று வேலூர் சிறைக்கு சென்று அவர்களை சந்தித்தார்.
இருபது நிமிட சந்திப்பிற்கு பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ''சிறையில் மூன்றுபேரையும் தனித்தனியே சந்தித்து உரையாடினேன். அப்போது அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக காட்டிக்கொள்ள முயற்சித்தனர்.
சிறையில் உள்ள அவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி, எத்தனை முறை நிராகரித்தாலும் தண்டனையை குறைக்கும் அதிகாரம் மாநில அரசாங்கத்திற்கும் உண்டு.
மாநில முதல்வரும், அமைச்சர்களும் நினைத்தால் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி தண்டனையை குறைக்கலாம்.
தூக்குத்தண்டனை என்பது அவர்களை மட்டும் பாதிக்காது; அவர்களின் உறவினர்களையும் பாதிக்கும். ஒவ்வொரு நொடியும் நமக்கு மரணம் என்பதை தெரிந்துகொண்டு வாழ்வது கொடுமையானது. இதனால்தான் பல நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டார்கள். ஆனால், இந்தியாவில்தான் ஒழிக்கப்படாமல் உள்ளது.
ஐநாவில் அதற்கு எதிர்ப்பான தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்பான தீர்மானத்தில் இந்தியா கையெழுத்திடாமல் உள்ளது'' என்று கூறினார்.
அரசியல்கைதிகளுக்கான அமைப்பின் செயலாளர் கேசவன் உட்பட பலருக்கு சிறைக்கைதிகளை அனுமதிப்பதற்கு வேலூர் சிறை நிர்வாகம் அனுமதி அளித்திருந்தும் போலீசார் அவர்களை உள்ளே நுழைய விடவில்லை. இதனால் வேலூர் சிறை வாசலில் சிறிது நேரம் வாக்குவாதமும், பதட்டமும் நிலவியது.
http://cmk-mobilesms.blogspot.com
http://cmk-mobilesms.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?