Tuesday, 30 August 2011

பெண்கள் ஆண்களைப�� புரிந்துகொள்வத��� எப்படி?




                              உணவகம் ஒன்றில்நான்கு பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.நண்பர் ஒருவர் அவருக்கு ஏற்பட்டஅனுபவத்தைச் சொன்னார். தங்கையின் தோழியுடன் நன்றாகப் பேசுவது வழக்கம்.சிலநேரங்களில் கேட்ட உதவியும் செய்வதுண்டு.போன் செய்து சந்தேகம் கேட்டாலும் இயல்பாகபேசுவார்.அடிக்கடி வீட்டுக்கு வருவதுண்டு என்பதால் காமெடியாக பேசிக்கொள்ளும்அளவுக்கு பழக்கம்.

                              திருமணத்துக்கானஏற்பாடுகள் செய்து பெண் பார்க்கப்போனார்கள்.வீட்டுக்கு வரும் வழியில் தங்கையின்இன்னொரு தோழியைப்பார்த்து எதேச்சையாக பேசப்போக அவர் முகத்தை திருப்பிக்கொண்டுபோய்விட்டார்.நன்கு பழகிய தங்கையின் தோழிக்கு போன் செய்தால் பேசவில்லை.தங்கையைகேட்டாலும் அவரும் ஆச்சர்யமாக கேட்கிறார்.பின்னர் தெரிய வந்த விஷயம் தங்கையின்தோழிக்கு இவர் மீது ஒருதலைக் காதல்.

                              இவருக்கு மனதில்அப்படி எந்த எண்ணமும் இல்லை.பெண் தானாகவே ஆசையைவளர்த்துக்கொண்டிருக்கிறது.தங்கையின் தோழி இன்னொருவரிடம் சொல்லியிருக்கிறார் " நான் எவ்வளவோநம்பியிருந்தேன்".அவராக ஏன் நம்பிக் கொள்ள வேண்டும்.தன்னை காதலிப்பதாகஅவராக ஏன் நினைத்துக்கொள்ள வேண்டும்? நன்றாக பேசினால்,உதவி செய்தால் மனம்எதையெதையோ கற்பித்துக்கொள்கிறதா?

                               எங்களுடன்அமர்ந்திருந்த இன்னொரு நண்பன் கூறினான்"பெண்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்''.உன் மனதிலும்அப்படி ஏதாவது எண்ணம் இருந்திருக்கும்".சத்தியமாக இல்லை என்று மறுக்க பத்திரிகை நண்பர்சொன்னார்" பெண்கள் ஒருவன் தன்னை எவ்வாறு பார்க்கிறான் என்றுதான் ஆண்களைப் புரிந்துகொள்வார்கள்.அவர்களைப்பொறுத்தவரை ஆண்கள் இரண்டு வகைதான்,ஒருவன் ஜொள்விடுபவன்,இன்னொருவன் அப்படி இல்லாதவன்"

                                  அவன்விளையாட்டாக சொன்னாலும் எனக்கு சிந்தனையைத் தூண்டியது.எளிதில் புரிந்துகொள்ளும்பெண்களை விட எளிதில் ஏமாந்து போகும் பெண்கள் அதிகமாக இருப்பதை பார்த்திருக்கிறோம்.செண்டிமெண்டுக்குபலியாவது ஒரு பிரச்சினை என்றால் இன்னொன்று சாதாரணமாகவே மனிதமனம் பொருள்சார்ந்த்து.வழியில் ஒருவர் கோபமாக பேசிக்கொண்டிருந்தார்."அவனுக்கு தினமும் குடிக்க வாங்கிக் கொடுத்தால்நல்லவன் இல்லாவிட்டால் கெட்டவன்,அவன் சகவாசமே வேணாம்"

                                  குழந்தையாகஇருக்கும்போதே தின்பதற்கு ஏதாவது வாங்கி வரும் மாமாவை விட கையை வீசிக்கொண்டு வரும்மாமாவை நமக்கு பிடிப்பதில்லை.அன்பு பொருளில் இருப்பதாக நினைப்பது நமக்கு பழகிப்போய்விட்ட்து.பரிசுப்பொருள் வாங்கிக் கொடுத்தால் மிகுந்த அன்புடையவன் என்றுநினைத்துக்கொள்வது அப்படித்தான்.ஆண் பெண் அனைவரிடமும் டீ வாங்கிக் கொடுத்துஹோட்டலுக்கு கூட்டிப்போய் நல்லவன் ஆகி விடுபவர்கள் உண்டு.

                                  ஆண்திட்டமிட்டு ஏமாற்றுவதை பெண்களால் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ளமுடிவதில்லை.ஆனால் யாரைத்தான் நம்புவது? அதிலும் காதல்,காம்ம் போன்றவற்றில்உணர்ச்சிப் பெருக்கோடு இருப்பதால் யோசிக்க முடிவதில்லை.மனம் உணர்ச்சிவசப்படும்போது சிந்திக்கும் திறனை இழந்து விடுகிறது.நல்லவர்களின் துணை இருந்தால் மீளமுடியும்.

                                  பொதுவாகவேஆண்களைவிட பெண்கள் புரிந்து கொள்ளும் திறன் அதிகம்தான்.ஆணுக்குவெளிவிவகாரங்கள்,புகை,குடி,போட்டிகள்,அங்கீகாரம் என்று மனம் ஒரு நிலைப்படுவதில்பிரச்சினைகள் உண்டு.பெண்ணுக்கு அப்படி எதுவும் இல்லாத்தால் மனதைஒருமுகப்படுத்துவது எளிது.இதனால்தான் படிப்பிலும் கூட பெண்கள் ஆண்களைவிட அதிகஅளவில் தேர்ச்சி பெறுவது சாத்தியமாகிறது.


http://snipshot.blogspot.com




  • http://snipshot.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger