முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா, ''தூக்கு என்பது தமிழக மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே 3 பேரின் தூக்கை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை குடியரசுத்தலைவர் ஏற்றால் 3 பேரின் தூக்குத்தண்டனை ரத்தாகலாம். மாநில அரசின் கோரிக்கையை ஏற்று தூக்கு ரத்து செய்யப்பட்ட முன் உதாரணம் உள்ளது'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவுக்கு பேரறிவாளன் தாயார் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், மரண தண்டனையை எதிர்த்து தொடர்ந்து போராடப்போவதாகவும் அறிவித்துள்ளார். தமக்கு ஏற்பட்ட வேதனை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்றும் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
http://cmk-mobilesms.blogspot.com
http://cmk-mobilesms.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?