சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி மற்றும் அரசியல் சிறை வாசிகள் விடுதலைக்கான குழு இணைந்து வேலூரில் முருகன்,சாந்தன், பேரறிவாளனை காப்பாற்றக்கோரி பொதுக்கூட்டம் நடத்தினர்.
இக்கூட்டத்தில் தமிழ் தேச பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் பேசும்போது, ''கடந்த 19 நாட்களாக முருகன், சாந்தன், பேரறிவாளனைப்போல நாமும் மன சித்திரவதைகளை அனுபவித்து வந்தோம். அதற்கு இன்று ஒரு சிறு தீர்வு கிடைத்துள்ளது.
இது நமது ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றி பெரிய அரசியல் கட்சிகளாலோ இயக்கங்களாலோ கிடைத்தது அல்ல.
சிறு சிறு இயக்கங்களாலும் மக்கள் எழுச்சியாலும் கிடைத்தது.
இந்த எழுச்சி சட்டமன்றத்தில் மூன்று பேருக்காக தீர்மானம் இயற்ற வைத்தது. இது பற்றி மல்டி சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அது எங்களை கட்டுப்படுத்தாது என்று டெல்லியில் அமர்ந்துகொண்டு அதிகாரமாக பேசும், உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்னை கட்டுப்படுத்த.
நீ என்ன எனக்கு மாமனா? மச்சானா? அண்ணனா? தம்பியா? 1947 ஆகஸ்ட் 15ந்துக்கு முன்பு வரை எங்களை ஆள வேறு ஒருவன் பிறந்தது இல்லை. எங்களை ஆள வந்தவன் கூட எங்களது மண்ணுக்கே வந்து அமர்ந்துகொண்டுதான் ஆட்சி செய்தான்.
மன்னர் காலந்தொட்டு ஆங்கிலேயர் காலம்வரை அதுதான் நிலை. 1947 ஆகஸ்ட் 15க்கு பின்புதான் டெல்லியில் இருந்துகொண்டு எங்களை நீ ஆள்கிறாய். எங்களை நீ அடிமையாக்கிவிட்டாய். என்னை கட்டுப்படுத்த பார்க்கிறாய்.
இத்தனை தெனாவட்டாகக்கூறும் காங்கிரஸ்காரனின் திமிர் இன்னும் அடங்கவில்லை'' என்று தெரிவித்தார்.
http://cmk-mobilesms.blogspot.com
http://cmk-mobilesms.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?