சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது
by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday,
காரைக்காலை அடுத்துள்ள பேரளம், கோவிந்தச்சேரியை சேர்ந்தவர் சின்னப்பா மகன் விஜிமாறன் (25). இவர், காரைக்காலிலிருந்து மீன்களை மொத்தமாக வாங்கிச் சென்று பேரளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வந்தார். இவருக்கும், புனிதா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் சுரக்குடிக்கு வந்த விஜிமாறன், அங்கு நின்று கொண்டிருந்த சிறுமி கலா (15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நைசாக பேசி, திருநள்ளாறு பேரளம் சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் அருகில் உள்ள பட்டுப் பூச்சி திடலுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து திருநள்ளாறு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பால் என்கிற மரிகிறிஸ்டியன், சப்–இன்ஸ்பெக்டர்கள் அனில்குமார், சுரேஷ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, விஜிமாறனை கைது செய்தனர்.
The post சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?