நடிகர் அஜீத்தின் பரந்த மனசு! வீட்டில் வேலை பார்த்தவங்களுக்கு கிடைத்த அதிர்ஸ்டம்!
by abtamil
Super Star Ajith
நடிகர் அஜீத் தனது வீட்டில் பத்து ஆண்டுக்கு மேல் பணியாற்றும் டிரைவர், சமையல்காரர், தோட்டக் காரர் உள்ளிட்டோருக்கும் அலுவலக உதவியாளர்களுக்கும் ஏற்கனவே இலவசமாக அரை கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்தார். கேளம்பாக்கத்தில் இந்த நிலத்தை வாங்கியுள்ளார். அவரவர் பெயருக்கு தனது சொந்த செலவிலேயே பத்திரப்பதிவும் செய்து கொடுத்தார். இதனால் ஊழியர்கள், மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையடுத்து அந்த இடத்தில் தனது செலவில் வீடுகளையும் அவர் கட்டிக் கொடுக்கிறார். கட்டுமான பணிகள் துவங்கியுள்ளன. வீடுகள் எப்படி கட்டப்பட வேண்டும் என்ற வரை படத்தை பார்த்து அஜீத் ஒப்புதல் வழங்கியுள்ளாராம். அதன்படி வீடு கட்டும் வேலைகள் நடக்கிறது.
அது மட்டுமின்றி தன் வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் இரு சக்கர வாகனங்களையும் வாங்கி கொடுத்துள்ளாராம். அஜீத்தின் சேவை மனப்பான்மையை பார்த்து மற்ற நடிகர்களும் தங்களிடம் நீண்ட காலம் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கு நிலம் வாங்கி கொடுக்க தயாராகிறார்கள்.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?