கால்நடைத்தீவன ஊழல்: நிதீஷ்குமாரும் சிக்குகிறார் Fodder corruption nitish kumar trap
Tamil NewsToday,
ராஞ்சி, அக். 5–
பீகார் மாநிலத்தில் ரூ.950 கோடி கால்நடைத்தீவன ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்– மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கால்நடைத் தீவன ஊழல் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.
இதற்கிடையே கால்நடைத் தீவன ஊழலில் தற்போதைய பீகார் முதல்–மந்திரி நிதீஷ் குமாருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 1995–ம் ஆண்டு தேர்தலின் போது அவர் கால்நடைத்துறை அதிகாரி சின்கா என்பவரிடம் இருந்து ரூ.1.40 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டப்படி மிதிலேஷ்குமார் சிங் என்பவர் இதை கண்டு பிடித்தார். ரூ.1.40 கோடி லஞ்சம் பெற்ற பிறகு முதல்–மந்திரி நிதீஷ்குமார் போனில் சின்காவுக்கு நன்றி தெரிவித்ததும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் உதவியுடன் தெரிய வந்துள்ளது.
நிதீஷ்குமாருக்கு எதிரான இந்த தகவல்களின் அடிப்படையில் மிதிலேஷ்குமார் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு வரும் 22–ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.
எனவே இந்த வழக்கில் சி.பி.ஐ. என்ன பதில் சொல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நிதீஷ்குமாரும் கால்நடைத் தீவன ஊழலில் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?