டல்லடிக்கிறதா 'ராஜா ராணி' வசூல்? : கலக்கத்தில் ஆர்யா!
by abtamil
ஒருபக்கம் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' என்ற ஒரு நல்ல படத்தை எடுத்து விட்டு மனக்கஷ்டத்துடன் பணக்கஷ்டமும் ஒருசேர, ஊர் ஊராக பசை வாளியைத் தூக்கிக் கொண்டு போஸ்டர் ஒட்டப் போய்க் கொண்டிருக்கிறார் டைரக்டர் மிஷ்கின்.
எந்த தழுவலும் இல்லாமல் ஒரு நல்ல படத்தைக் கொடுத்த மிஷ்கினின் நிலைமை இப்படி இருக்க, மெளனராகம் படத்தை அப்படியே காப்பியடித்து விட்டு டைரக்டர் ஷங்கர் போல பிரம்மாண்டம் என்னும் மெஸ்மரிசத்தை ஸ்கீரினில் காட்டி 'ரஜா ராணி' படத்தை ஹிட் லிஸிட்டில் சேர்த்து விட்டார் டைரக்டர் அட்லி.
போதாக்குறைக்கு பாக்ஸ் ஸ்டார் கம்பெனியும் தன் பங்குக்கு பப்ளிசிட்டி என்ற பெயரில் ராஜாராணியை தனது சொந்த சேனலில் பிய்த்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் என்னதான் தலைகீழாக தொங்கிப் பார்த்தும் பட வசூல் என்னவோ ஏ சென்டரில் தான் ஸ்டெடியாக இருக்கிறதாம். பி அண்ட் சி செண்டர்களில் உள்ள பல தியேட்டர்களில் படம் காத்து தான் வாங்குகிறதாம்.
இதனால் கலக்கமடைந்த டைரக்டர் அட்லியும் ஹீரோ ஆர்யாவும் வசூலை அதிகப்படுத்த தமிழகத்தின் முக்கிய ஊர்களில் உள்ள தியேட்டர்களுக்கு விசிட் செய்து ரசிகர்களை நேரில் சந்திக்க கிளம்பி விட்டார்கள்.
ஏற்கனவே மதுரை, திருச்சி, சேலம் ஆகிய ஊர்களில் உள்ள தியேட்டர்களுக்கு சென்று இன்டெர்வெல்லில் ரசிகர்களை சந்தித்து பேசிவிட்டு வந்த ஆர்யா அடுத்து ஈரோடு, திருப்பூர், கோவை, கொச்சி என மற்ற ஊர்களுக்கும் விசிட் அடிக்கப் போயிருக்கிறாராம்.
என்ன தான் படம் நல்லாயிருக்கு என்று வெளியில் மவுத் டாக் கிளம்பினாலும் உண்மையில் சென்னை சிட்டி தவிர மற்ற இடங்களில் ராஜா ராணி படத்தின் வசூல் ரொம்ப ரொம்ப கம்மி என்பது தான் நிஜமான உண்மையாம்.
அதனால் தான் டல்லடிக்கும் வசூலை தூக்கி நிறுத்த டைரக்டர் அட்லி கொடுத்த ஐடியா தான் இந்த ஊர் ஊரா திரியில டூர் ப்ளானாம்.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?