Monday, 19 September 2011

கூடங்குளம் போரா��்டத்துக்கு ஆதரவ���க துள்ளி எழும் ப���ிவுலகம்...!!!




கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்துக்கு ஆதரவாக பதிவர்கள் படையெடுக்கும் இந்த நேரத்தில், நேற்று தம்பி பலே பிரபு சாட் பண்ணினான், அண்ணே இந்த உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டிருக்கும் நம் பதிவர் கூடல்பாலா போன் நம்பர் உங்ககிட்டே இருக்கான்னு, அதற்க்கு நான் இல்லை தம்பி தேடிபார்கிறேன், கிடைத்தால் உனக்கு தருகிறேன் உனக்கு கிடைத்தாலும் எனக்கு அனுப்பு என சொன்னேன்.

தம்பி நல்ல பொறுப்பா எனக்கு இன்றைக்கு கூடல்பாலாவின் போன் நம்பர் அனுப்பியிருந்தான் [[நன்றி தம்பி]] பரபரவென மனசினுள் பதட்டம் வந்தது. தாமதிக்காமல், உடனே போன் செய்தேன் பாலா'வுக்கு. அவர் சொன்ன போராட்டங்களின் விவரம் கீழே....

இன்றைக்கு உண்ணாவிரதம் ஆறாவது நாளாக நடைபெறுகிறது, கள்ளிகுளம் காலேஜ் ஸ்டுடன்ட்ஸ், கூத்தங்குளி அன்னை அப்பா காலேஜ் ஸ்டுடன்ஸ், இன்னும் ஒரு காலேஜ் ஸ்டுடன்ஸ்'களும் மேலும் கலந்து கொண்டார்களாம்.

உண்ணாவிரதம் இருப்பவர்கள் மொத்தம் நூற்றி இருவது பேர், மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இருவதாயிரத்துக்கும் மேலாக இருக்கிறது.

நாகர்கோவில் டாக்டர் உதயகுமார் பொறுப்பாக போராட்டத்தை கவனிக்கிறாராம், இவர் உலகநாடுகள் அனைத்துக்கும் போய் வருபவர், ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாகி நேரில் போயி பத்துநாள் தங்கியிருந்து பார்த்திட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஐந்து அமைச்சர்கள் பேச்சி வார்த்தை நடத்தியிருக்கிறார்கள், அவர்கள் சொன்னது போராட்டத்தை கைவிட்டுட்டு, அம்மாவுடன் பேச வாருங்கள் என சொன்னார்கள். மக்கள் உண்ணாவிரதம் இருந்துகிட்டே பேச்சு வார்த்தை நடத்தலாமே என சொல்ல அமைச்சர்கள் எஸ்கேப்...!!!

வைகோ, அண்ணன் சீமான், வெள்ளையன்  போன்ற தலைவர்கள் நேரில் போயி போராட்டத்தை வலுபடுத்தினார்கள்.

வணிகர் சங்கம் வெள்ளையன் அவர்கள் தமிழகம் எங்கும் கடையடைப்பு நடத்த போகிறார், போராட்டத்துக்கு ஆதரவாக....

போராட்டம் நடக்கும் இடத்தில்  இருந்து பதினைந்து மைல் சுற்றளவுக்கு, வாகனங்கள் உள்ளே போகாதபடி போலீசார்
தடுத்து வைத்து  இருக்கிறார்கள்...!!!

காலையிலேயே கௌசல்யா கூடல்பாலா'வுக்கு போன் செய்து நானும் வரட்டுமா என்று கேட்டதற்கு, பதினைந்து மைல் சுற்றளவுக்கு போலீஸ் உள்ளே வர போலீஸ் கெடுபிடி பண்ணுமே மேடம், வந்து கஷ்டப்பட்ட வேணாம்னு பாலா சொன்னாராம்....!!!

இன்றைக்கு பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் போராட்டத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டதோடு அல்லாமல் ஜி கே மணியை போராட்ட இடத்துக்கு அனுப்பி வைக்கிறார்.

சரத்குமார் போராட்டத்துக்கு ஆதரவாக அறிக்கையும், குரலும் குடுத்து வருகிறார்.

விஜயகாந்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டதுமல்லாமல், நேரில் வருகிறாராம்....!!!

திமுக'வும் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும்படி தீவிரமாக யோசிப்பதும் அல்லாமல், ஸ்டாலின் நேரில் வருவதாக இருக்கிறதாம்...!!!

ஜெயலலிதா, அணுமின் நிலையம் பாதுகாப்பாவே இருக்கிறது என்கிறார்...!!! [[ மக்களுக்கு பாதுகாப்பு எங்கே மேடம்...?]]

கூடல்பாலா போராட்டத்தின் பேச்சுக்கள், போட்டோக்கள் எல்லாம் நிறைய எடுத்து வச்சிருக்காராம், ஆனால் லேப்டாப்பின் நெட் கனெக்ஷன் டெத் ஸ்லோவா இருக்கிறதுனாலே பதிவில் போடமுடியவில்லை'ன்னு மிகவும் வருத்தப்பட்டார்...

அவரிடம் பேசினதில் இருந்து தெரியவந்தது என்னான்னா, பதினஞ்சி மைல் சுற்றளவுக்கு உள்ளே மக்கள் [[போராட்டத்துக்கு]] போகமுடியாதபடி போலீஸ் தடை செய்வது ஏன்..?? அடங்கொன்னியா உனக்கும் சேர்த்துதானே போராடுறாங்க...?? சுனாமி, பூகம்பம் வந்தா மக்களை  பாதுகாக்க முடியாத அணு உலையை வச்சிட்டு, எப்பிடிய்யா மக்கள் நிம்மதியா இருப்பாங்க...???

அண்ணே இன்னும் ரெண்டுநாள்ல போராட்டம் முடிவுக்கு வந்துரும்ண்ணே, இந்தபோராட்டம் மட்டும் சக்சஸ் ஆச்சுன்னா, இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களின் அணு உலைகளும் மூடும்படி, நாம் உலகத்துக்கே முன்மாதிரியா இருப்போம் அண்ணே'ன்னு கூடல்பாலா சொன்னார் [[நான் நெகிழ்ந்து போனேன், உமக்கு நல்ல மனசுய்யா...!!!]]

பதிவுலகம் இப்போதான் ஷாக் அடிச்சாமாதிரி துள்ளி எழும்பி இருக்கு, பதிவர்களே, சுனாமியால் ஜப்பானில் அணு உலையால் மக்கள் பட்ட இன்னல்களை கண்டோம் அல்லவா..? நாம் சுனாமி வந்ததுக்கே தாங்கமுடியாத வேதனையை அனுபவித்தோமே..? அதேஇடத்தில் அணு உலையும் வந்தால்......நினச்சி கூடபார்க்க முடியவில்லை.

நாம் எலியோ பூனையா குரங்கோ அல்ல சோதனை செய்து பார்க்க, கூடுமானவரை கைகோர்த்து போராடுவோம்....

லைவ் நியூஸ் தெரிந்துகொண்டு பதிவிடுங்கள் போனைபோடுங்கள் கூடல்பாலாவுக்கு 0091'9940771407

koodalpaalaa'வின்  பிளாக் 
ஆணிவேர் வலைத்தளம்

 மனதோடு மட்டும் கௌசல்யா
தமிழ்வாசி" பிரகாஷ்
போராட்டத்தில் தமிழ்வாசியின் இந்த பதிவு மேடையில் வாசிக்கபட்டதாம்...!!!
வைறை சதீஷ்


http://tamil-smsworld.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger