Monday, 19 September 2011

வினாடியும் நொடி��ும் ஒன்றா? - தமிழ் படும் பாடு




தமிழர்கள் அந்த காலத்திலேயே பல் துறைகளிலும் கில்லாடிகளாக விளங்கினர் என்பது பலருக்கு தெரியாது.. கணிதம், பொறியியல், கட்டடவியல், மருத்துவம் என அவர்கள் தொடாத துறை இல்லை.

தஞ்சை பெரிய கோயில் இன்றும் நம்மை பிரம்மிக்க வைக்கிறது என்றால், அதற்கு காரணம் அன்றைய தொழில் நுட்பம்..

அன்றைய கண்க்கீடுகள், அளவைகள்,  உலோகவியல், கட்டடம் கட்டும் முறை பற்றியெல்லாம் இன்னொரு பதிவில் விரிவாக அலச உத்தேசம்..

அன்று கூறிய சில, கால வெள்ளத்தால் எப்படி மாறி இருக்கிறது என்பதை மட்டும் ஷார்ட் அண்ட்  ஸ்வீட்டாக இப்போதைக்கு பார்க்கலாம்..

___________________________________________________


ஓர் ஆங்கில புத்தகதை பெருமைக்காக புரட்டியபோது, சில ஆங்கில சொற்களுக்காக அகராதியை நாடினேன்.. செகண்ட் என்ப்தற்கு அதில் அர்த்தம்,  வினாடி அல்லது நொடி என்று இருந்தது..

வினாடியும் நொடியும் ஒன்றுதான் என நினக்கிறோம்.. தப்பு..

கண் சிமிட்டும் நேரம் என்கிறோமே... இரண்டு முறை கண்  சிமிட்டும் நேரம்தான், நொடி என வரையறை செய்துள்ளனர்...  எனவே செகண்ட் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையானது நொடிதான்.

வினாடி என்றால்?

14.4 செகண்ட் சேர்ந்தால் ஒரு வினாடி.

60 வினாடி = ஒரு நாழிகை ( 24 நிமிஷம் )  ( சித்த நாழில வந்துட்றேன் என்ற வார்த்தை பிரயோகத்தை சிலர் கேட்டு இருக்கலாம்.)

60 நாழிகை = ஒரு நாள்


கால வெள்ளத்தில் பொருள் சிதைந்து விட்டது... அர்த்த மாறிய வேறு சிலவற்றை பார்க்கலாம்
____________________________________

வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை... போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை..

வாக்கு கற்றவனுக்கு  வாத்தியார் வேலை.. போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை என்பது இப்படி மாறி விட்டது

______________________________________________________


காக்கா பிடித்தல்...

கைய காலை பிடிச்சி வேலையை முடித்தேன் என்பது , கால்கையை பிடித்தேன் என்பதுதான் காக்கா பிடித்தேன் என மாறி விட்டது... காக்கா வலிப்பு என்ப்தையும் கவனிக்கவும்..

____________________________________________


சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

கிராமங்களில் பார்க்கலாம்.. தலையில் பானையை சுமந்து செல்பவர்கள் , தலை மேல் ஒரு துணியை வாட்டமாக அமைத்து அதற்கு மேல் பானையை வைப்பார்கள்..இந்த துணிக்கு சும்மாடு என்று பெயர்..

ஒருவனுடைய குடுமி என்னதான் அடர்த்தியாக  இருந்தாலும் அது சும்மாடு ஆக முடியாது.
சோழியன் குடிமி சும்மாடு ஆகுமா என்பதுதான் திரிந்து சோழியன் குடுமி சும்மா ஆடுமா? என மாறி விட்டது

****************************




http://tamilfashionshow.blogspot.com



  • http://tamilfashionshow.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger