Monday, 19 September 2011

கமலஹாசனுடன் பிர��ல பதிவர்கள் சந்திப்பு...!!!




ஒரு பெரிய பதிவர் சந்திப்பு நடக்கப்போகுது இங்கே கமலஹாசன் தலைமையில, அதுவும் மொக்கை சந்திப்பு. பேச்சு ஆரம்பிக்குது.

கோமாளி செல்வா : நான் ஒரு சின்ன கதை சொல்லி கூட்டத்தை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் சொல்லட்டுமா?

பன்னிகுட்டி : டேய் பன்னித்தலையா நெல்லை பதிவர் சந்திப்புல உன் கதையை கேட்டுட்டு நான் இனி நெல்லை பக்கமே வரமாட்டேன்னுட்டு சித்ரா அமெரிக்காவுக்கும், தமிழ்வாசி காசிக்கும் ஓடிபோயிட்டாங்க, ஏண்டா நாங்க நல்லாயிருக்குறது உனக்கு பிடிக்கலையா பிச்சிபுடுவேன் பிச்சி அப்பிடியே ஓரமா போயி ஒன்டிக்க...

இ அ பாபு : அண்ணே சின்னபையன் ஆசைபடுறான் சொல்லிட்டு போகட்டுமே...

பன்னிகுட்டி : யாரு இவன் சின்னப்பையனா..? விரல  குடுத்தா கடிக்கதெரியாதா...? டேய் இவன் நம்மளை டவுட் கேட்டே கொன்னுருவான்ய்யா பரவாயில்லையா...? உயிரோட வீட்டுக்கு போகவேண்டாம்னு கன்பார்ம் பண்ணிட்டியா...

சிபி : எனக்கு அலாஸ்கா ரேங், பலஸ்கா ரேங் என்னான்னு கேட்டு, நீங்க இத்தனை மணிக்குதான் பதிவு போடணும், நீங்க பதிவு  போடுறதாலே எனக்கு அலாஸ்கா குலஸ்கா ரேங் கண்ணுக்கு தெரியமாட்டேங்குது [[கண்ணாடியை கழட்டுடா பரதேசி]] அப்பிடின்னு நிறைய பேருக்கு மெயில் அனுப்பி கொல்லனும் அதனால மீட்டிங்கை உடனே முடியுங்க அக்காங்...

பன்னிகுட்டி : டேய் கண்ணாடி தலையா கொஞ்சம் தள்ளு, ஏண்டா அலக்ஸா அலக்சாண்டர்ன்னு எதுக்குடா இப்பிடி நாட்டுல அலையுறீங்க, நாலு கில்மா பதிவு போட்டமா, பத்துபேர் வந்து ஜொள்ளு விட்டானான்னுட்டு போகவேண்டியதுதானே, இல்லன்னா இருக்கவே இருக்கு விகடன், மனோ'ன்னு ஒரு நாதாரி குமுதத்தை போட்டு நக்கு நக்குன்னு நக்கி காப்பி பேஸ்ட் போடுது ம்ஹும்...

விக்கி உலகம் : என்னாது அலாஸ்கா'வா அது யாரு அமலா பால் தங்கச்சியா அல்லது தப்சி அக்காவா..?

நிரூபன் : எனது பால பிராயத்திலே, நான் ஹாயாக ஆயி போக காட்டுக்கு போகையிலே,  ஒரு கன்னிப்பெண் காட்டுக்கு போகையிலே, கரடி ஒன்னு வந்தினும், அதுகிட்டே இருந்து அவளை அழுது புரண்டு கதைத்து காப்பாத்தினேன், அப்புறமா அவள் பெயரை கேட்டேன் அலாஸ்கா எண்டு சொன்னாளா பிலாஸ்கா எண்டு சொன்னாளா மறந்துட்டன்.

சிரிப்பு போலீஸ் : ஐ அண்ணே அதென்ன அலாஸ்கா சாப்பாடு...?? மணக்குது மணக்குது சோறு சோறு சோறு, முட்டை...பிரிபிரியாணி பிரிபிரியாணி.....

பன்னிகுட்டி : ஏண்டா பன்னாடை,  அவனவன் அலாஸ்கா யாருண்ணே தெரியாம முட்டி மோதிட்டு இருக்கான் படுவா வாயா, உனக்கு முட்டை சோறு கேக்குதா, புண்ணாக்கை கரைச்சி வாயிக்குள்ளே ஊத்திபுடுவேன் ஜாக்கிரதை ஆமா...

வானதி : அங்கிள் அங்கிள், அலாஸ்கா என்பது எந்த எந்த நாட்டின்  பெயர் அங்கிள்....?

ராஜி : அண்ணே அண்ணே அலாஸ்கான்னா கூடங்குளம் ஊரின் மறு பெயர்தானே...?

கல்பனா : அலாஸ்கான்னா..............ம்ம்ம்ம் நான் விஞ்ஞானம் படிக்க ரஷ்யா போனபோது ம்ம்ம்ம் மறந்து போச்சி அவ்வ்வ்வவ்........அது ஒரு வகை கொக்குன்னு நினைக்கிறேன், மனோ அண்ணா அடிக்காதீங்க அடிக்காதீங்க...[[நான் இந்த மீட்டிங்குக்கு போகதேன்னு சொன்னேன் கேட்டியா]]

சென்னை பித்தன் : அலாஸ்கா, நான் மதுரையில் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக இருந்தபோது, இந்த நோயில ஒரு பேஷன்ட் வந்ததா மைல்டா ஒரு டவுட்டு நினைவில் இருக்கு இருங்க கூலிங் கிளாசை கழட்டிட்டு கொஞ்சம் யோசிக்கிறேன்.....

ரமணி "குரு" : அலாஸ்கா, என்பது ஒருவித கவிதை பிராந்தி [[பிராண்டி அல்ல]] உள்ளவங்களுக்கு வந்து சங்கடபடுத்துற காதல் கவிதைன்னு சைக்கிள்கடை வைத்துவிட்டு தூய தமிழில் இங்கிலீஷ் பேசும் என் நண்பன் சொன்னான்...

கரன் : இல்லை இல்லை அலாஸ்கா'ன்னா கலைஞர் டீம் செய்த வேறொரு ஊழலின் பெயர், விசாரணை ஆரம்பம்னு, நெட்தமிழ்'ல நியூஸ் போட்டுருக்காயிங்க...

கவிதைவீதி : ம்ம்ம்ம் நான், கவிதை காதல் மோதல் சாதல் தாடி கர்மம், போடி வாடி சாடி ஓடி, நொந்து அப்பிடீன்னு ஒரு கவிதை எழுதலாம்னு இருக்கேன். அதுக்கு இந்த அலாஸ்கா தலைப்பு பொருந்தும்னு நினைக்கிறேன் "பாட்டுரசிகன் " மீது சத்தியமா....

கோமதி : அலாஸ்கா, இது எங்க பாளையங்கோட்டையில விளையிற ஒருவித பயிர், இதை மயில்கள் [[இருந்தாதானே]] விரும்பி சாப்பிடும், இதை நன்றாக கழுவி தண்ணி ஊத்தி கொதிக்கவச்சி, வெங்காயம் சீரகம் தக்காளிஎல்லாம் போட்டு.....[[கல்பனா ஓவென அழுவதை கேட்டு நிறுத்துகிறார்]]

கோ செல்வா : கண்டிப்பா இது ஒரு நடிகை பெயர்தான், சோனியா பிந்த்ரே, அமலா பால், அந்தரா மாலி, மாதிரி இது அலாஸ்கா  ரேங்.....[[சிரிப்பு போலீஸ் கல்லெடுக்க கீழே குனியவும் அடங்குகிறான்]]

கே ஆர் விஜயன் : நிறுத்துங்கய்யா மச மசன்னு பேசிட்டு, ம்ம்ம் அலாஸ்கா, இது என் கடையில ஆபீஸ் டிராயருக்குள்ளே ஒளிச்சி வச்சி நான் மாத்திரம் பார்க்கும் ஒருவித சிடி டைப்'ன்னு நினைக்கேன்...

மாப்பிளை" ஹரீஸ் : விஜயன் அண்ணே ஏன் அண்ணே எனக்கு அந்த அலாஸ்கா சிடி'யை காட்டலை..?? [[விஜயன் முறைக்கவும், இரும் இரும் உங்க வீட்ல போட்டு குடுக்குறேன்னு சைலன்ட் ஆகிறான்]]

பன்னிகுட்டி : ஐயோ அய்யய்யோ கொக்கமக்கா எல்லாரும் என்னமா சொல்லுறாங்கோ, எனக்கு தலைய பிச்சிகிட்டு தெருவுல ஓடனும் போல இருக்குடா சிபி....

அடுத்து கமலஹாசன் பேச [[கொல்ல]] வருகிறார்....

கமலஹாசன் : ம்ம்ம்ம் ஆங், அலாஸ்கா என்பது என்னான்னு, யாருன்னு தெரியாத நியாயமான கேள்வி, அலாஸ்கா ஆணா பெண்ணான்னு சொல்லி, சொல்லாமல் எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தாலும் சொல்லி சொல்லி பன்னிகுட்டி என்னை கடிச்சி வச்சிருவார் அல்லது பேசியாவது கடிப்பார்னு சொல்லமுடியும்,

 சொல்லமுடியாதுன்னு நான் அலாஸ்காவை கேட்டு அலாஸ்கா குலாஸ்கா  என்று என்னை குழப்பும் பதிவர்களின் மனநிலையில் நான் இருந்து பார்க்கும் போது, அப்பிடியே பார்க்காவிட்டாலும் பார்த்து என்னை முறைக்கும் சிபி என்ற நாதாரி, சாரி  தப்பா நினைக்காதீங்க எங்க நெருக்கம் அப்பிடின்னு சொன்னால், இதெல்லாம் உனக்கொரு பொழப்பா என்று கேட்கும் துப்பாக்கி, மன்னிக்கணும் விக்கி இடம் நான் பேசணும்.

அலாஸ்கா ஊரா நாடா அல்லது கெரகமா [[கிரகம்]] யோசிக்கணும். நான் கெரகம்னு சொன்னால், அதை படைத்தவன் யாருன்னு ஆத்திகவாதிகள் நாத்தியவாதியாகிய என்னை கடவுள் உண்டு இல்லைன்னு என்னை தாக்க வந்தாலும்  தாக்கி தாக்கி நொந்தாலும், நான் ஆத்திகவாதியால் நாத்திகவாதி ஆகி டவுசர் கிளிஞ்சதை சொல்வதை விட  சொல்லாமல் சொல்லி சொல்லி வாயிபுண்ணாக வேண்டாம்னு நிரூபன் வேண்டிகிட்டதாலே, அலாஸ்கா பற்றி முடிவெடுக்கும் நிலையின் காலகட்டத்துக்குள்  நாம் வந்திருக்கிறோம்,

 இதை நான் கடுமையாக சொல்லுவேன், யா, மிகவும் கடுமையாக சொல்லுவேன் சொன்னால் கிருஷ்ணாசாமி வெடிகுண்டு மிரட்டல் வந்தாலும் சொல்லமாட்டேன்னு  அர்த்தமில்லை. நான், நான் பயப்படுவேன் பயந்து, பயப்படாத மாதிரி நடிச்சி காட்டி நடிப்பு என் உயிர் அலாஸ்கா அலாஸ்கா ரேங்.......

பதிவர்கள் எல்லாரும் தலையை பிச்சிகிட்டு, தலை தெறிக்க ஓடுகிறார்கள்....

ஆனால் தமிழ்வாசி மட்டும் கமல் அருகில் வந்து, அவர் காலில் விழுந்து கால் சுண்டு விரலை மட்டும் பிடிச்சுட்டு சொல்றான், கமல் சார் கமல் சார், நீங்களும் புரியாம மற்றவங்களும்  புரியாம, தெளிவா குழப்புறதுல உங்களை மிஞ்ச யாருமே கிடையாது சார் என்று கண்ணீர் விடுகிறான்.

இதுக்கிடையில், பதிவர் சந்திப்புக்கு என்னை ஏன்டா  கூப்பிடலை நான் அலாஸ்கா சாப்பாடு திவானந்தாகிட்டே சொல்லி ஏற்பாடு பண்ணியிருப்பேன்ல, எல்லா தடியங்களும் எங்கே...?? என ஆபீசர் பெல்ட்டை உருவ.....

பிரகாஷ் கமலை போட்டு குடுக்குறான், ஆபீசர் அண்ணே எல்லாம் நல்லாத்தான் போயிகிட்டு இருந்துச்சி, இவர் பேசுன பேச்சில கோமாளியும், ரமேஷும் அங்கேயே சூ சூ போயிட்டாயிங்க, பன்னிகுட்டி நான் பூ மிதிக்க போறேன்னுட்டு ஓடுறாரு, விக்கி நான் தீவிரவாதிகிட்டேயே போயிருறேன்னு ஓடிட்டாரு, நிரூபன் பாத்ரூம் போனவரு போனவருதான் காணவே இல்லை என சொல்லவும் கடுப்பான ஆபீசர்...

எலேய் யாருலேய் அங்கே,  திவானந்தா ஹால் கதவை எல்லாம் சட்டுனு பூட்டுலேய்  என அலற [[பிரகாஷ் கால் கடகட.... ]] இதை கவனித்த ஆபீசர், தம்பி நீ போலாம்னு சைகை காட்டுகிறார். கதவு பூட்டப்படுகிறது.

கொஞ்சநேரம் கழித்து கதவு திறக்கையில், பதினாறு வயதினிலே கோவணம் கோலத்தோடு வெளியே வந்து பி எம் டபள்யூ காரில் ஏறி பறக்கிறார் கமல். ஆபீசர் மறுபடியும் பெல்டை இடுப்பில் சொருவுகிறார், திவானந்தா தூக்கிகட்டிய வேஷ்டியோடு அண்டர்வேர் தெரிய வெளியே வருகிறார் கையை முறுக்கியபடி.....

டிஸ்கி : சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க.......


http://tamil-smsworld.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger