உங்களுக்குத் தத்தீச்சி மகரிஷி பற்றித் தெரியுமா?! அகில இந்திய வானொலி பண்பலையில் ஒரு கண்தான விளம்பரத்தில், கர்ணனையும், தத்தீச்சியையும் உதாரணமாகக் கூறுகிறார்கள்.இது நாள் வரை கேள்விப்படாத பெயராக இருக்கிறதே எனத் தேடிப் பார்த்தேன்(நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாமோ என்னவோ).விவரம் கிடைத்தது. தேவ-அசுர யுத்தம் நடந்தபோது தேவர்கள் தங்கள் ஆயுதங்களையெல்லாம், பாதுகாப்புக்காக தத்தீச்சி ரிஷியிடம் ஒப்படைத்துச் சென்றனர்.
அசுரர்களால் அவற்றைக் கவர முடியவில்லை.பலகாலம் சென்றும் தேவர்கள் திரும்பி வந்து ஆயுதங்களைப் பெற்றுக் கொள்ளாததால், மகரிஷி அவற்றைப் புனிதத் தண்ணீர்ப் பானையில் போட்டுக் கரைத்துக் குடித்துவிட்டார்!
சிறிது காலம் சென்று தேவர்கள் வந்து கேட்ட போது நடந்ததைக் கூறி, ஆயுதங்களைப் பெறத் தன்னைக் கொன்று எலும்புகளை எடுத்துக் கொள்ளும்படிக் கூறினார்.தேவர்கள் மறுக்கவே,அவர் தீயில் பாய்ந்து உயிர் நீத்தார்.பிரம்மா அங்கு வந்து அவரது எலும்புகளிலிருந்து ஆயுதங்கள் செய்து தேவர்களுக்கு அளித்தார்.முதுகெலும்பில் செய்யப் பட்டதே இந்திரனின் வச்சிராயுதம்.
விளம்பரத்தில் ,தெரியாத ரிஷியின் பெயர் சொல்வதற்குப் பதில்,நாம் அறிந்த குமணன்,சிபிச் சக்கிரவர்த்தி எவர் பெயரையாவது சொல்லியிருக்கலாமோ?ஆனால் இதிலும் ஒரு நன்மை.நான் தேடித் தெரிந்துகொண்டேன் ஒரு புதிய தகவலை!!
.....................................................
எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா?!
மணமாகி ஏழாண்டுகள் கழிந்தால்,அந்த' ஏழாண்டு அரிப்பு ' வந்து விடுகிறது. பழைய உறவில் அலுப்புத்தட்டிப்,புது உறவில் நாட்டம் பிறக்கிறது.இதுவே மண விலக்குக்குக் காரணமாகிறது.இதைத்தடுக்கச் சைனாவில் ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கிறார்களாம்.
செய்ய வேண்டுவது என்னவென்றால்,கணவனோ,மனைவியோ,தபால் இலாகா புதிதாக அறிமுகம் செய்திருக்கும் சிறப்பு அஞ்சல் உறை ஒன்று வாங்கி அதில் தன் மனதில் இருக்கும் காதலையெல்லாம் கொட்டி ஒருகடிதம் எழுதி அனுப்பி விட்டால்,அக்கடிதம் ஏழாண்டுகளுக்குப் பிறகு பெறுநருக்குக் கிடைக்கும். அதைப் படிப்பவர் "அந்த நாள்ஞாபகம் நெஞ்சிலே வந்து" பிரச்சினைகள் இருந்தால் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை!
எனக்கு ஒரு சந்தேகம்---பெறுநர்(அனுப்புநரும்) பழைய விலாசத்தில் இல்லாமல் வேறு இடத்துக்குப் போயிருந்தால் என்ன செய்வார்கள்?
…………………………………..
லிமெரிக் எழுதி ரொம்ப நாளாச்சு! (சிந்து கவி-நன்றி நிரூ)
இதோ-
"சிங்காரி சரசு விட்டா ஒரு லுக்கு
ரங்குவுக்கு ஏறிச்சு ஒரே கிக்கு
போனான் உடனே அவ வீடு
தங்கினான் சில நாள் அவளோடு
இப்ப அவன் கையில் திருவோடு!"
http://oruwebsite-tamil.blogspot.com
http://oruwebsite-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?