நான் பஹ்ரைன் வந்த இரண்டாம் வருஷம் நடந்த ஒரு மோதல், சாரி காதல்....
நான் ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிந்த ஆரம்பகாலம், எங்கள் ஹோட்டலுக்கு புதிதாக அக்கவ்ண்டண்டாக பணிபுரிய கேரளா கோட்டயத்தில் இருந்து ஒரு புதிய பெண் வந்தாள், அழகோ அழகு கொள்ளை அழகு....!!!
எங்கள் ஹோட்டல் முதலாளி முதற்கொண்டு, மானேஜர், டிஷ்வாசர்கள் கூட அவள்மீது மையல் கொண்டிருந்தார்கள், ஆனால் அவள் மையல் கொண்டதோ சாதாரண சர்வரான என்மீது [[எலேய் அடிக்க வராதீங்கப்பா இது உண்மை, மட்டுமல்ல என் வீட்டம்மாவுக்கும் தெரியும்]]
நான் தமிழன் என்பதால் என்மீது ஒரு ஈர்ப்பு'ன்னு அடிக்கடி சொல்வாள், தமிழர்களை மிகவும் நேசிக்கும் மனம் [[அதுக்கு ஒரு சென்டிமென்ட் உண்டு சொன்னால் அழுதுருவீங்க ஸோ வருங்காலத்துல சொல்லுவேன், யாராவது மலையாளிங்க தமிழனை தாக்கும் போது]] அவளுடையது...!!!
அவள் பெயர் சு'மீதா [[பெயர் மாற்றபட்டுள்ளது]] கொள்ளையே கொள்ளை போகும் அழகு, அவளுக்காகவே தனியாக மேக்கப் போட்டுகொண்டுவரும் மானேஜர்கள், மற்றைய ஸ்டாப்'கள், ஆனால் எனக்காகவே தன்னை அலங்கரித்துக்கொண்டு, என்னிடம் மட்டும் வந்து கேட்பாள் "எங்கென உண்டு" என்று...
எனக்கு பொதுவா ஒரு குணம் உண்டு அதிகம் அழகா இருக்குற பெண்களை பிடிக்காது, காரணம் அவர்களின் ஆணவம். அதுலதான் சம்மட்டி அடி விழுந்தது!!!! சுமிதா பார்க்க நடிகை மீனா போல இருப்பாள், என்கூட வேலைபார்ப்பவர்கள் எல்லாருக்கும் [[மலையாளிகள்]] செமையான கடுப்பு....
அவள் என்னோடு பழகும் விதமும், அவள் எனக்கு வாங்கித்தரும் [[மறுத்தும் விடமாட்டாள்]] பரிசு பொருட்கள், நான் வேண்டாம் என்று சொன்னதால் நேரில் என் ரூமுக்கே வந்துவிட்டாள், அதுக்கு பயந்தே அவள் என்ன வாங்கிதந்தாலும் உடனே வாங்கிவிடுவேன்.
எனக்கு மலையாளம் சரியாக பேச கத்து தந்ததும் அவள்தான், [[பொம்பளைங்க கத்து தந்தா சீக்கிரம் கத்துக்கலாம் ம்ஹும் அதுவும் அழகான பெண்கள்??? கேட்கவே வேண்டாம் போங்க]]
இவளின் நோக்கம் [[காதல்]] அறிந்து இடையிடையே என் மனைவி பற்றியும், எனக்கு ஒரு பையன் [[பெண்குழந்தை அப்புறமா பொறந்தது]] இருக்குறான் என்பது பற்றியும் நாசுக்காக சொல்லுவேன், அவள் அதை பொருட்படுத்தவே இல்லை...
அடபாவிமகள் காதலை சொல்லியே விட்டாள், ஹோட்டல் மொத்தமும் சொல்லியும் விட்டாள். நான் எவ்ளோ எடுத்து சொல்லியும், கடுப்பான மலையாளிகள் போட்டுகுடுத்தும் அவள் அசையவே இல்லை....
நான் கல்யாணம் ஆனவன், எனக்கு ஒரு குழந்தையும் இருக்குன்னு எவளவோ சொல்லியும் கேட்பதாக இல்லை, என்னையும் கல்யாணம் பண்ணிக்கோ இல்லைன்னா செத்துருவேன்னு ஒருநாள் கத்தியால் கையை அறுத்து விட்டாள், மனசுகேக்காமல் ஓடிப்போனேன் பார்க்க, என்னை கட்டிபிடித்து அழுத அழுகை இன்னமும் ரணமாக நெஞ்சில இருக்கு....
அவள் குடும்பத்தார் எவளவோ எடுத்து சொல்லியும், எங்கள் முதலாளி அவளை மிரட்டியும் அவள் அசரவில்லை, ஏன்னா நான் கல்யாணம் ஆனவன் அவளை கல்யாணம் செய்ய எனக்கு மனமில்லைன்னு [[வீட்டம்மாகிட்டே வாயில அடி வாங்கவேண்டி பயந்து]] எல்லாருக்கும் தெரியும்....
முதலாளி [[மலையாளி]] என்னை கூப்பிட்டு மிரட்டினான், இப்பவே சர்ச் கூட்டிட்டு போயி ரெண்டுபேரையும் கல்யாணம் செய்து வச்சிருவேன்னு மிரட்டினான், சார் நான் யாரையும் காதலிக்கவும் இல்லை அது எனக்கு தேவையும் இல்லை என கடுமையாக சொன்னேன்....
எல்லாருக்கும் ஆச்சர்யமோ ஆச்சர்யம், எப்பிடிடா இந்த ஆதிவாசி மாதிரி இருக்குற பாண்டிக்கு இந்த கிளி சிக்குச்சுன்னு, அவளின் கண்ணீர் என்னை வெகுவா கரைக்க ஆரம்பிச்சது, என் வீட்டம்மாகிட்டே எதுவும் மறைக்க மாட்டேன், அவளிடம் சொன்னதும் ஈசியா சொல்லிவிட்டாள், நோ பிராப்ளம் அத்தான், எனக்கு கொள்ளிவைக்க வந்துருங்க....
எவளவோ கெஞ்சி பார்த்தேன் கோபப்பட்டேன், அடியும் விழுந்தது, அசரவில்லை [[காதல் அம்புட்டு பவர்போல]] அவள்.....என்ன செய்யன்னு யோசனையா இருந்தப்போ, சக தோழி திவ்யா என் அவஸ்த்தையும் அவள் அவஸ்த்தையும் புரிந்தவளாய் எனக்கு ஐடியா தர ஆரம்பித்தாள்...
சுமிதா'வுக்கு எது எது பிடிக்காதோ அதையெல்லாம் செய்ய சொன்னாள், அதையெல்லாம் செய்தேன், அவளுடன் பணிபுரியும் மற்ற சேச்சிகளும் அவளை பிரைன் வாஷ் செய்ய....
இதுக்கிடையில் என் நண்பன் [[மலையாளி]] அவள் மீது காதல் செய்ய [[எனக்கும் அவனுக்கும் ஒரு அலைவரிசை கிடடையாது]] அவனும் ஒருநாள் தன் கையை அறுத்து காதலை சொல்ல, சேச்சி'களும் சுமிதாவை மூளைசலவை செய்ய, நண்பனின் காதலுக்கு சம்மதித்தாள்.
அவனும் "உடனே" அவளை ஊருக்கு கூட்டிக்கொண்டு போயி திருமணம் செய்துகொண்டான். கல்யாணம் முடிந்து திரும்பி வந்தார்கள், எனக்கு பிரமோசன் கிடைக்க ஆரம்பிச்சுச்சி, ஊரில் இருந்து வந்தவள் என்னோடு பேசவும் இல்லை, ஏன் ஒரு ஹாய் கூட சொல்லவில்லை, நானும் கண்டுக்கவில்லை, வேலை விஷயமாக ஏதும் கேள்வி இருந்தால், கேள்விக்கேற்ற பதில் மட்டுமே.....
அழகான ஒரு பெண் குழந்தையும் பிறந்தது அவர்களுக்கு, அதுவரைக்கும் நானும் அவளும் பேசினதே கிடையாது, அந்த குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு பெரிய பங்ஷன் வைத்தார்கள், என்ன நினைத்தார்களோ எனக்கும் அழைப்பு வந்தது.
எனக்கு போகவே மனசில்லை, காரணம் பங்சனுக்கு வரும் எல்லாருக்குமே எங்கள் விஷயம் தெரியும், ஆனாலும் மலையாளி நண்பர்கள் என்னை வலுகட்டாயமாக கொண்டு போகவே, குழந்தைக்கு ஏதாவது வாங்கணுமே என்று ஒரு தங்க மோதிரம் வாங்கி சென்றேன்...
என்னை வரவேற்றது அவள் கணவன், அவன் கையில் மோதிரத்தை குடுத்தேன், எல்லார் கண்களும் என்மீது, சுமிதா தெரியாதவள் போல நின்றிருந்தாள்.
நான் வேகமாக வெளியேறினேன் சில நண்பர்களுடன் பேசிவிட்டு, லி ஃ ப்'டில் வராமல் மாடிப்படி வழியே கடகடவென இறங்கினேன், இரண்டாவது ஃப்லோர் வரவும் சுமிதா எனக்காக காத்திருந்தாள், என்னை ஓடிவந்து கட்டிக்கொண்டாள், அவள் என்னோடு பேசாதது காரணம் அவள் கணவனாம்..
கல்யாணம் முடிந்து முதல் இரவில் அவளிடம் வாங்கிய முதல் சத்தியம், என்னோடு பேசக்கூடாது என்றாம்...!!!! ஆகவேதான் பேசவில்லை என்றாள், என் நெஞ்சை அவள் கண்ணீரால் நனைத்தாள், நானும் தடுக்கவில்லை, காதலின் அன்பு எனக்கு தெரியாதா என்ன....
அழுதுவிட்டு சொன்னாள், மனோ என் குழந்தையின் பெயர் என்ன தெரியுமா...?? உன் பேர்தான் வச்சிருக்கேன் மனு'ன்னு [[என்னை அப்பிடிதான் கூப்பிடுவாள்]] நீ பங்க்சன்ல பாதியில போகாதே மனு, என்மீது கொஞ்சமாவது அன்பு இருந்தா என் குழந்தையை கையில் எடுத்து ஒரு முத்தம் கொடுத்து விட்டு போ என்றாள்...
உன்னோடு நான் பேசினதுல என் மனபாரம் எல்லாம் காற்றோடு போயிருச்சி என்றாள், அவளை லிப்டில் அனுப்பிவிட்டு நான் படியில் நடந்து போனேன், போயி குழந்தையை கையில் எடுத்து முத்தம் கொடுத்தேன், குழந்தை என்னை கையால் வருடியது, கையை கவனித்தேன் விரலில் நான் கொடுத்த மோதிரம் பளிச்சிட்டது...!!!!
விடைபெற்றேன், அவள் முகம் பார்த்தேன் பரம திருப்தியாக சைகையால் விடை கொடுத்தாள் அந்த தேவதை!!!!
மறக்க நினைச்ச விஷயம் பத்து வருஷமாச்சு, திடீர்னு இன்னைக்கு பேஸ்புக் சாட்'ல தேவதை வந்தேவிட்டாள் அதே அழகோடு, என் மீது அன்பை பொழிந்து, ஆனால் இது காதல் அல்ல நட்பு என்று சொல்லி சிரிக்கிறாள்....!!!!
என் பேஸ்புக்ல தேவதை வந்துருக்கா, என் பேஸ்புக் அக்கவுட்ன்ல அவள் போட்டோவும் இருக்கு கண்டுபிடிக்கிறவங்க கண்டு பிடிச்சிக்கோங்க[[இந்த பதிவு அவளின் அனுமதி பெற்றே இட்டுருக்கிறேன்]], அவளுக்கு இப்போது இரண்டு குழைந்தைகள் இருக்காம் [[வாழ்க செல்லம் வளமுடன்]] இப்பவும் ஐ லவ் யூ'டான்னு சொல்லி என்னை கலாயிக்கிறாள் ஹா ஹா ஹா ஹா....!!!!
http://tamil-smsworld.blogspot.com
http://tamil-smsworld.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?