Thursday, 15 September 2011

பதிவுலகம் அழிந்��ு வருகிறதா?



ஃபேஸ்புக், பஸ் போன்றவற்றால் பிளாக் எழுதுவது குறைகிறதா? பிளாக் உலகம் அழிகிறதா என்பது கேள்வி..

உடனடி ஃபீட் பேக், விவாதம் என சில வசதிகள் அவற்றில் இருப்பது உண்மை.. பிளாக்கில் பிசியாக இருந்த சிலர் அங்கு பிசியாக இருப்பதும் உண்மை..
இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை உண்டு.. ஆர்வம் உண்டு. இதில் உயர்ந்தது தாழ்ந்தது என எதுவும் இல்லை...

சிலருக்கு பரபரப்பு ஏற்படுத்துவது பிடித்து இருக்கலாம். அரட்டை பிடித்து இருக்கலாம்..  கூட்டம் சேர்ப்பது பிடித்து இருக்கலாம்..

இவர்களுக்கும் பிளாக் இடம் அளித்தது...  " என்ன எழுதவது..ஒன்றுமே இல்லை " என கூட சிலர் பதிவிடுவதும், அதற்கு சிலர்  விமர்சன பின்னூட்டம் இடுவதும் உண்டு..

ஆனால் இந்து போன்ற கேளிக்கைகளுக்கு பிளாக்கை விட ஃபேஸ் புக், பஸ் போன்றவை உகந்தது என்பதால், மேற்கண்ட பாணியிலான எழுத்துக்கள் தற்போது பிளாக்கில் குறைந்து விட்டன.

அதே நேரத்தில் , கூட்டம் சேர்ப்பதைப்பற்றி கவலைப் படாமல், தம் சிந்தனைகளை , நல்ல தகவல்களை பகிர்பவர்கள். முன்னைக்காட்டிலும் அக்கறை எடுத்து பிளாக் எழுத ஆரம்பித்துள்ளனர்..

தற்போது , பிளாக்கில் ஆரவார எழுத்துக்கள் குறைந்து விட்டதால் , நல்ல எழுத்துக்களை , நிதானமாக படிக்க முடிகிறது..

திரட்டிகளில் இனைத்தல், ஓட்டு  போடுதல் என்பதெல்லாம் தெரியாத சில தமிழ் அறிஞர்கள் பிளாக் எழுதி வருவது இப்போதுதான் என் பார்வைக்கு வந்தது .. கிரேட்.. மிக பயனுள்ளதாக இருக்கிறது..

அதே போல , சரக்குள்ள பழைய பதிவர்கள் மட்டுமே இன்றும் எழுத்தை தொட்ர முடிகிறது என்பதால், அவர்களின் எழுத்தும் மேம்பட்டுள்ளது..

இந்த நிலை எனக்கு மகிழ்வளிக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள் என அனைவரையும் கேட்டு கொள்கிறேன்



http://tamil-smsworld.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger