Thursday, 15 September 2011

பாக்கெட் நிறைய ப���்பு வாங்குன பதி��ன் பார்ட் முற்றும்...!!!




நாசமாபோவ, பிளேன் ஒருமணி நேரம் லேட்டாகிருச்சென்னு கவலையில இருக்கும் போதே பசி எடுக்க ஆரம்பிச்சது. பிளேன்ல போயி சாப்பிடலாம்னா வயிறு கேட்டாதானே, அப்பிடியே சாப்பாடு கவுன்டர் பக்கமா நடந்து போனேன், கே எஃசி, மெக்டோனால், சைவம், அசைவம்னு நிறைய கவுன்டர்கள்  இருந்தன.

கென்டக்கி சிக்கன் சாப்பிடவே மாட்டேன் நான், ஆனாலும் இங்கே சாப்பிட ஆசை வந்துவிட்டது, போயி கியூவில கொஞ்சநேரமா நின்னபிறகு  என் முறை வந்தது. போயி ரெண்டு பீஸ் உள்ள சிக்கன் ஆர்டர் பண்ணினேன். 105 ரூபான்னு மெனுவுல இருந்தது, ஒரு தினார் நோட்டை எடுத்து குடுத்ததும், வெடுக்கென சிக்கன் பிளேட்டை உள்ளே எடுத்து வைத்து விட்டு சொன்னான்... 

தினார் வாங்கமாட்டோம் ஒன்லி இந்தியன் மணி அல்லது யு எஸ் டாலர்தான் வாங்குவோம்னு  கறாரா சொல்லிட்டான். நான் ஒட்டுமொத்தமா எல்லா காசையும் தினாரா மாற்றி  வச்சிட்டேன். இனி மாற்றவும் முடியாது காரணம் இமிகிரேஷன், செக்யூரிட்டி செக்கிங் தாண்டி வந்தாச்சுன்னா வெளியே போக அனுமதி இல்லை. ஸோ பல்பு....

யாராவது இப்பிடி வெளிநாடு போகும்போது மொத்தமா காசை சேன்ஜ் பண்ணிறாதீங்க. ஏன்னா பிளேன் எப்போ எந்தநேரம் லேட்டாகும்னு சொல்லமுடியாது. [[பாம் புரளி பேஷனா இருக்கும் காலம் இது]] சின்னகுழந்தைகள் வச்சிருக்கவிங்க இன்னும் ஜாக்கிரதை.

பசி, என்னடா பண்ணலாம்னு யோசிச்சிகிட்டே அந்த மலையாளி பக்கம் வந்தமர்ந்தேன். என்னான்னு கேட்டான், விஷயத்தை சொன்னேன். உடனே நோ பிராப்ளம் சேட்டா என்கிட்டே இந்தியா பணம் இருக்கு வா சாப்பிடலாம்னு அழைத்தான். நான் சொன்னேன் ஓகே நான் உனக்கு தினார் தருகிறேன்னு வற்புறுத்தி சொன்னாலும் சேட்டன் பணம் வாங்க மறுத்துவிட்டான் [[மலையாளிகளை இந்த விஷயத்தில் பாராட்டலாம்]]

ஒரு சமோசா, வடை [[அந்த வடை இல்லை]] கவுன்டருக்கு போனோம், சமோசா, வடை, ஹய் மசாலா தோசையும் இருந்தது. எது வேண்டுமானாலும் 95 ருபீஸ், மசாலாதோசை ஆர்டர் பண்ணி கூப்பன் வாங்கி அடுத்த கேபின்ல குடுத்தோம். 

தோசை சட்னி சாம்பார்லாம் ஒரே பிளேட்ல வச்சிகுடுத்தாங்க, டேபிள்ல வந்து சாப்பிட தோசையை பியித்தேன், தோசை சூடா இருக்கு உள்ளே இருக்கும் பட்டட்டோ மசாலா சில்லுன்னு இருக்கு, என்னடான்னு கேபின்காரனை  போயி கேட்டதுக்கு, இந்த ஏர்போர்ட்ல மசாலா தோசை இப்பிடித்தான் இருக்கும்னு கூலா சொன்னான் படுபாவி, ஃபிரிஜ்ல இருந்து அப்பிடியே எடுத்து போட்டு தந்துகிட்டு, சொல்றான் பாருங்க விளக்கம் ஹி ஹி [[பல்பு]]

சரி ஃபிளைட் ரெடி ஆகிரிச்சின்னு சொன்னதும், நம்மை டைரக்டா பிளேன்ல எரோபிரிஜ் மூலமா பிளேன்ல ஏத்துவாயிங்கன்னு நம்பி போனேன் அங்கேயும் பல்பு, நேரே எங்களை படிமூலமா கீழே இறக்கி பஸ்சுல ஏறசொன்னாங்க [[அவ்வ்வ்வ்]] பஸ்சுல ஏசியும் கிடையாது மண்ணும் கிடையாது, [[ஏர் இந்தியா ஏர்வேஸ் ஒழிக]] நாலு கிலோமீட்டர் தள்ளி நின்ன ஒரு சக்கடா பிளேன்ல ஏனியில ஏறவச்சிட்டாங்க ம்ஹும் [[நல்லவேளை கயிறை தொங்கபோட்டு  ஏறவைக்கல]]

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் கொஞ்சூண்டு சாப்பாடு மட்டும்தான் தருவார்கள். மேலும் நமக்கு டிரிங்க்ஸ் சம்திங் வேணும்னா காசு கொடுத்து வாங்கணும். என் அருகில் இருந்த வட இந்தியன் ஒருவர் என்னிடம் விசாரித்தார், டிரிங்க்ஸ் என்ன விலைன்னு தெரியுமான்னு, நான் எல்லாம் தெரிஞ்சவன் போல சொன்னேன் நிறைய காசு இருக்கும் வாங்காதேன்னு, அவனும் அப்பிடியான்னு கேட்டுகிட்டான்.

சாப்பாடு வந்தது சாப்பிட்டோம், அப்புறமா பீர், பக்கார்டி ஒயிட் ரம், ஒயின் சகிதம் வந்தது கேஷ் ஒன்லின்னு, வட இந்தியன் நேரே ஏர்ஹோஸ்டல் கிட்டே கேட்டேவிட்டான் எம்புட்டு விலைன்னு அவ்வ்வ்வ்..... ரொம்ப சீப்பான ரேட், பக்கார்டி மினியேச்சர் ஒரு தினார், பீர் பாதி தினார். சாதாரணமா வெளியே வாங்குனா மினி பக்கார்டி ரெண்டரை தினார்...

என்னை முறைச்சான் பாருங்க முறைப்பு [[பல்பு]] முறைச்சிட்டு, அஞ்சி மினி பக்கார்டி பாட்டலும் ஒரு பீரும் வாங்கிட்டு என்னை மறுபடியும் முறைத்தான், எப்பா குடிச்சிட்டு வானத்துலையே கலாட்டா பண்ணிருவானோன்னு பயம் வேற, குடிக்கிறவன் நேரே இருந்து குடிக்கவேண்டியதுதானே, என்னையே முறச்சி முறச்சி பார்த்தா என்னவாகிறது..???

அந்த வட இந்தியன் போட்டோதான் மேலே இருப்பது, பிளேன்ல கூடிப்போனா அம்பது பேர்தான் இருந்திருப்போம், எல்லா இருக்கைகளும் காலியாக கிடந்தன. பின்னே ஏர் இந்தியாவா கொக்கா கொய்யால, கூடியவரை ஏர் இந்தியா'வை புறக்கணிப்பதே நல்லது எனப்பட்டது.

டிஸ்கி : அப்பாடா தொடர் முடிஞ்சது தப்பிச்சிகிட்டீங்க [[நோ நோ கல்லெல்லாம் எடுக்கப்டாது]]




http://tamil-actress-photo.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger