Thursday, 15 September 2011

வாங்க பழகலாம்--ரௌத்திரம்



ரௌத்திரம் பழகென்றான் பாரதி
உண்மைதான்!

பழகத்தான் வேண்டும்-
பழக்கமில்லாத எதுவும்
பழகத்தான் வேண்டும்!

சித்திரமும் கைப் பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்

கை பழகப் பழகத்தான்
சித்திரம் வரும்;
நா பழகப் பழகத்தான்
செந்தமிழ் வரும்
மனம் பழகப் பழகத்தான்
ரௌத்திரம் வரும்


நாமெல்லாம் பழகி விட்டோம்-

ரௌத்திரமல்ல!
சகிப்புத்தன்மை-ஆம்

புரையோடிப் போய் விட்ட
சமூக அவலங்களை நாம்
பழகி விட்டோம் -சகித்துக்கொள்ள!

சூழ் நிலையின் கைதிகளாய் வாழ்ந்து
பழகி விட்டோம்- சகித்துக் கொள்ள!

நரி இடம் போனால் என்ன,
வலம் போனால் நமெக்கென்ன
நம்மைத்தாக்காதவரை
என்னும் மனப்பாங்கால்
பழகி விட்டோம்- சகித்துக் கொள்ள!

எல்லோரும் காந்தியா என்ன?
ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னமும் காட்டுவதற்கு!

நமது நேர்மையில் குறையில்லாத போது
ஒரு கன்னத்தில் அடித்தால்
திருப்பி ஒரு கன்னத்திலேனும்
அடிக்கும் துணிவு வர,
ரௌத்திரம் பழகு!

எளியோரை வலியோர் வாட்டினால்

வலியோரை வாட்ட
வராது இன்று தெய்வம்!

எளியோர்க்குத் துணை போக
உடல் வலிமை பெற வேண்டும்
பெற்றாலும் வேண்டும் மன வலிமை
அவ்வலிமை பெற வேண்டி
ரௌத்திரம் பழகு! ரௌத்திரம் பழகு!

வாங்க பழகலாம்!!

(மீள்பதிவு)


http://devadiyal.blogspot.com



  • http://devadiyal.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger